175 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான செல்பி போட்டோ

Share it:
ad
தனக்கு தானே போட்டோ எடுத்து கொள்ளும் ‘செல்பி’ முறை தற்போது பிரபலமாகி விட்டது. செல்போன்–காமிரா மூலம் அவரவர் தங்களை பலவித கோணத்தில் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.

‘செல்பி’ குறித்து சினிமா பாடல்களும் வர தொடங்கிவிட்டன. அந்த அளவுக்கு ‘செல்பி’ தற்போது பிரபலமாகி விட்டது.

ஆனால், இந்த ‘செல்பி’ போட்டோ எடுக்கும் முறை கடந்த 175 ஆண்டுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது. அமெரிக்காவின் பிலாடெல்பியர் நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839–ம் ஆண்டில் முதல் ‘செல்பி’ போட்டோ எடுத்தார்.

இவர் தனது தந்தையின் கடையை ‘செல்பி’ முறையில் போட்டோ எடுத்தார். அந்த போட்டோவின் பின்புறத்தில் ‘முதல் செல்பி’ போட்டோ என எழுதி வைத்தார்.

இதன் மூலம் அவர் பிரபலமானார். இருந்தாலும் 2 ஆண்டுகளில் தனது தந்தையின் விளக்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார். கார்னெலியஸ் தந்தை நெதர்லாந்தில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
Share it:

Post A Comment:

0 comments: