ஜம்மியத்துல் உலமாவின் அதிரடி திட்டங்கள்..!

Share it:
ad
இன்று முஸ்லிம் சமூகம் சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல சவால்களை சந்தித்துவருகின்றது. இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக முகம்கொடுக்கும் வகையிலும் நாட்டிலுள்ள சமகால நிலையை கருத்தில் கொண்டும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்ச்சிகளை நடாத்த  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திட்டமிட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நான்கு கிளைகளிலும் இந்நிகழ்ச்சி 01.11.2014 மற்றும் 02.11.2014 ஆம் திகதிகளில் நடைபெற்றது. முதலாவது நிகழ்ச்சி, சனிக்கிழமை (01.11.2014) காலை 09:00 மணியளவில் கொலன்னாவை ஜும்ஆ மஸ்ஜிதிலும் இரண்டாவது நிகழ்ச்சி, சனிக்கிழமை (01.11.2014) மாலை 03.30 மணியளவில் மாதம்பிட்டிய ஜும்ஆ மஸ்ஜிதிலும் மூன்றாவது நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (02.11.2014) காலை 09:00 மணியளவில் கொழும்பு பெரிய பள்ளிவாசலிலும் நான்காவது நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (02.11.2014) மாலை 03.30 மணியளவில் தெஹிவளை ஜும்ஆ மஸ்ஜிதிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை கொழும்பு பிரதேசக் கிளைகள், தலைமையகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

மேற்படி இந்த நிகழ்ச்சிகலில் உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், துறைசார்ந்தோர் மற்றும் புத்திஜீவிகள் அடங்மலாக 2000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி பின்வரும் விடயங்களை நோக்காக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Ø முஸ்லிம்களை இபாதத்தின் பக்கம் ஆர்வமூட்டி, பெரும்பாவங்களை விட்டும் தூரப்படுத்தல்
Ø சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புதல்
Ø முஸ்லிம்களது சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்தல் (குறிப்பாக குடும்பவியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனம்காணல்) 
Ø மஸ்ஜித்களில் மக்தப்களை கட்டியெழுப்புதல் மற்றும் பாடசாலைகள், மாணவர்கள் தொடர்பான கல்விசார் பிரச்சினைக்கான தீர்புகளை முன்வைத்தல்
Ø மஸ்ஜித்களை அடிப்படையாகக் கொண்ட 'பய்துஸ் ஸகாத்' திட்டத்தை அறிமுகப்படுத்தல் மற்றும் சமூக சேவை செயற்பாடுகளை ஊக்குவித்தல் 

மேற்கூறிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்சிகளில் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளை மையப்படுத்தி உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் புத்திஜீவிகளை உள்ளடக்கிய சில குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன் அவற்றுக்கான செயற்திட்டங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் 134 பிரதேச மற்றும் மாவட்டக் கிளைகளின் உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மேற்படி நோக்கங்கள் நிறைவேறவும் முஸ்லிம்களது ஆன்மீக மற்றும் சமூக அபிவருத்தி ஏற்படவும் நாட்டில் சமாதானமும் சகவாழ்வும் நிலவவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.

அஷ்-ஷைக் பாழில் பாரூக்
செயலாளர் - ஊடகப் பிரிவு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Share it:

Post A Comment:

0 comments: