சந்திரிகா - ரணில் இரகசியச் சந்திப்பு...!

Share it:
ad
(நஜீப் பின் கபூர்)

வருகின்ற 10ம் திகதிக்கு முன்னர் தனக்கு மூன்றாவது முறையும் தேர்தலில் நிற்க முடியுமா என்ற தகவலை உயர் நீதி மன்றத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர் பார்க்கின்றார். சாதகமான தீர்ப்பு வந்தால் வருகின்ற 19ம் திகதி தேர்தல் தொடர்பான அறிவிப்பும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் இன்று 05.11.2014 காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரணதுங்ஹ பண்டாரநாயக்காவுக்கும், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்குமிடையே மிகவும் இரகசியமான முறையில் சந்திபபொன்று நடந்திருப்பதாகத் தெரிய வருகின்றது.

மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ரணில் போட்டியில் இருந்து ஒதுங்கி பொது வேட்பாளர் ஒருவருக்கு இடம் கொடுக்க இணங்கி இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொது வேட்பாளர் ஆளும் தரப்பு முக்கிஸ்தர் ஒருவராக இருக்கக்கூடும் என்றும் நம்பப் படுகின்றது.

இதன் மூலம் ஜேவிபியையும் சமாளித்து ஆளும் தரப்பிலுள்ள பெரும் எண்ணிக்கையான சுதந்திரக் கட்சி முக்கிஸ்தர்களை இந்த அணியில் இணைந்து கொள்ள இடமிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபி தன்னை ஆதரிக்க பின் நிற்பதால் சந்திரிகா இந்தக் காய் நகர்த்தலைச் செய்திருக்கின்றார் என்று நம்பப்படுகின்றது.

என்றாலும் ரணிலை நம்பித் தீர்மானங்களை எடுக்க முடியுமா என்ற விடயத்தில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றது. 
Share it:

Post A Comment:

0 comments: