ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்தான் - சஜித் பிரேமதாச

Share it:
ad
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை களமிறக்க கட்சி தீர்மானித்துள்ளதாகவும் இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களோ அல்லது வாத விவாதங்களோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் தர்க்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை களமிறக்க கட்சி தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லும் இந்த ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்திற்கு முடிவு கட்ட ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களை உதாசீனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு உதவிகளை செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சி மீது அரசாங்கம் குற்றம் சுமத்திய போதிலும், அரசாங்கம் ஜெனீவாவிற்கான இலங்கை தூதரகத்தினை புனரமைக்கும் பணிகளை புலி ஆதரவாளர் ஒருவருக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: