பிடிவாதம் பிடிக்கும் சஜித் பிரேமதாஸ

Share it:
ad

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வின் தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்திருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு வாதமும் இல்லையென்றும் ஐ.தே.க.பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று வியாழக்கிழமை கூறியுள்ளார். 

ஐ.தே.க. விலிருந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடப்போகிறார்க்ள் என்பது பற்றித் தர்க்கிப்பதில் எந்த விடயமும் இல்லை. தனது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதென கட்சி தீர்மானித்திருக்கிறது. ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கெண்டுவருவதற்கு ரணில் விக்கிரமசிங்க பற்றுறுதிப்பாட்டுடன் இருக்கிறார். ஊழலே இந்த நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை ஐ.தே.க. அரசாங்கம் மட்டுமே உறுதிப்படுத்தும். தேர்தல்களிலும் வரவுசெலவுத் திட்டங்களிலும் உழைக்கும் மக்களின் நம்பிக்கைகளை இந்த அரசாங்கம் சிதறடிக்கிறது. 

ஊழல் மோசடியை நாங்கள் நிறுத்துவோம். அரச சேவையில் காணப்படும் இவற்றை முடிவுக்கு கொண்டுவருவோம் என்று தேசிய ரயில்வே சேவைகள் சங்கத்தின் பத்தொன்பதாவது வருடாந்த மாநாட்டின்போது சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். தரக்குறைவான மருந்துகள், மின்சார நிலையங்களை மக்களுக்கு வழங்கி தரங்குறைந்த சேவைகளை அரசாங்கம் வழங்க முயற்சிப்பதை ஐ.தே.க.வுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
Share it:

Post A Comment:

0 comments: