பொது வேட்பாளர் விடயத்தில் சில தினங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் - சோபித்த தேரர்

Share it:
ad
எதிர்வரும் சில தினங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும் என நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்க இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தொடர்பில் கோட்டே நாக விகாரையில் இன்று 07-11-2014  இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர், தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, தொழிற்சங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

எனினும், இன்றைய கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வீ.பி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் தெளிவுப்படுத்திய பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளன முன்னாள் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி, பொது விடயங்கள் மற்றும் அதனை ஏற்று கொண்ட பொது வேட்பாளர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதுதவிர, தேர்தல் முறைமையை மாற்றுதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் 17வது அரசியலமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: