முஸ்லிம் காங்கிரஸினை தோற்றுவித்தவர் தி.மு. ஜயரத்னாவா..? அப்படியானால் அஸ்ரப்..??

Share it:
ad
(நஜீப் பின் கபூர்)

அண்மையிலிருந்து நாம் மு.கா.வை இலக்கு வைத்துக் கடுமையான விமர்சனங்களை மேற் கொண்டு வருகின்றோம். எமது இந்த விமர்சனங்களினால் புனித உம்ராவுக்கு மக்கா போன மு.கா. தலைவருக்குக் கூட நிம்மதியாக அங்கு   இருக்க முடியவில்லை. எனவே எமது செய்திகளுக்கு அவரும் அதிரடியாக அங்கிருந்தே பதில் வழங்கி இருந்தார். இது பழைய கதை!

நாம் அண்மைக் காலமாக ஏன் எமது விமர்சனங்களை அதிகரித்திருக்கின்றோம் என்பதனை மு.கா. தொண்டர்களும் முஸ்லிம் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசியில் தீர்க்கமான ஒரு நேரமிது. 

எனவே அரசியல் தலைமைகள் தீர்மானங்களை மேற் கொள்கின்ற நேரங்களில் சில நினைவூட்டங்களையும் அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும் என்பதனால் தான் இந்த நடவடிக்கைகள்.

மா மனிதன் அஸ்ரப் தோற்றுவித்த மு.காவில் எமக்கும் உடன்பாடுகள் நெருக்கங்கள் முன்பு இருந்தாலும் மு.கா.வின் அண்மைகால சந்தர்ப்பவாத நடவடிக்கைளுடன் ஒத்துப்போக முடியாதிருப்பதால் தான் இந்த விமர்சனங்கள்.

அதனைச் சந்தியில் நின்று செய்வதைவிட இவ்வாறான ஊடகங்கள் வாயிலாக இதனை நாம் மேற்கொண்டு வருகின்றோம். 

என்றாவது ஒரு நாள் அஸ்ரப் காலத்து மு.கா. மீண்டும் மலருமான என்றுதான் நாமும் எதிர் பார்க்கின்றோம். அந்த இலக்கை மையமாகக் கொண்டே சமகால  விமர்சனங்கள். 

எமது நகர்வுகள் மு.கா. ஆதரவாளர்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவிப்பதும் எமக்குப் புரிகின்றது.  அங்கு இந்த விமர்சனங்கள் தொடர்பாகப் பேசப்படுகின்ற செய்திகள் தொடர்பாகவும் எமக்குத் தொடர்ச்சியாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எமது இப்படியான விமர்சனங்களுக்கு மு.கா. தலைமை சார்பிலும் தனி மனித விசுவாசிகளிடமிருந்தும் பதலிகளும் அவ்வப்போது தரப்பட்டுக்  கொண்டிருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களுக்கு -நன்றிகள்.

நேற்றுப் பாராளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம் எமக்கு மீண்டும் ஒரு விமர்சனத்திற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றது. 

தர்கா நகர் அலுத்கம சம்பவத்தின் போது இதே பிரதமர் அங்கு பிரச்சனைகளை ஆரம்பித்தவர்களே முஸ்லிம்தான் என்ற ஒரு அபாண்டத்தை சொன்ன போதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக  இருந்தனர்.  பின்னர் ஹசன் அலி போன்றவர்கள் இதற்குச் சாக்குப் போக்கு சொல்லித் தப்பிக் கொள்ளவும் முனைந்தது முஸ்லிம்களுக்கு நினைவிருக்கலாம். 

அது எப்படிப்போனாலும் இப்போது அதே பாராளுமன்றத்தில் இதே பிரதமர் தி.மு. முஸ்லிம் காங்கிரசின் தோற்றுவிப்பாளன் நான் தான் என்று பகிரங்கமாகப் பேசிய இருக்கின்றார்.  இன்று மு.கா. தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்தச் சந்தர்ப்பத்திலும் ஊமைகளாக அங்கு இருந்திருக்கின்றார்களே! இதனை மு.கா. தொண்டர்களால்  எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்? எனபது தான் எமது கேள்வி?

அப்படியானால் தி.மு.ஜயரத்தன என்பவர் தான் இதன் பின்னர் மு.கா. ஸ்தாபக் தலைவர்? என்று எதிர்காலச் சந்ததியினர் கருதிக் கொள்ளத் தாராளமாக  இடமிருக்கின்றது. கதை விட்டிருப்பவர் இந்த நாட்டுப் பிரதமர் அல்லவா? எம்மைப் பொறுதத் வரை இது அஸ்ரபை அவமாதிக்கின்ற ஒரு கூற்று. 

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அப்படிப் பேசும் போது மௌமாக இருந்து மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு அங்கிகாரம் வங்கி இருப்பது தான் இதிலுள்;ள மிகப் பெரிய வேடிக்கை வேதனை. 

அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்திருக்காவிட்டாலும் ஊடகங்கள் மூலம் உடன் பதில் கொடுத்திருக்கலாமே என்று தான் நாம் அவர்களிடத்தில் கோபப்படுகின்றோம். ஒரு புளுகுக்கு உயிர் கொடுத்து அஸ்ரபுக்குத் துரோகம் பண்ணி விடாதீர்கள். 

எமது இந்த செய்தியின் பின்னர் இதற்கும் மு.கா.தரப்பில் ஏதும் காரணங்கள் சொல்லப்பட்டாலும். மு.கா. தரப்பில் இவ்வறான பெரும் தவறுகள் விடப்படும் போது எப்படிப் பார்வையாளர்களாக இருக்க முடியும் என்பதனால்தான் எமது இந்த விமர்சனங்கள்.! 

மு.கா.  வரலாற்று ஆரம்பம் தற்போதய தலைவர் ஹக்கீமுக்குக் கூட அனுபவ ரீதியில் தெரிந்திருக்கா விடட்hலும், செயலாளர் ஹசன் அலிக்கு இது நன்று தெரிந்த கதைதானே?

அப்படியானால் அஸ்ரப் போட்ட பிச்சையில்  அரசியல் பண்ணுகின்ற இவர்கள் நடவடிக்கைகளை மு.கா. ஆhரவாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டால் அது தவறா?

அப்படியானால் இந்த தி.மு.வுக்கு எப்படி மு.கா.வில்  பங்கு என்ற கதையையும் தெரியாதவர்களுக்கு நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தி.மு. அப்போது கம்பளை சுதந்திரக் கட்சி அமைப்பாளர். 

1988ல் நடந்த முதல் மாகாண சபைத் தேர்தலை  சுதந்திரக் கட்சி பகிஸ்கரித்து. அந்தக் கால கட்டத்தில்  அஸ்ரப் தனது மனைவி பேரியலின் கம்பளையில் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு தி.மு.வுடன் ஒரு உறவு. இதனால் அஸ்ரபின் வேண்டுகோளுக்கு ஏற்ப தி.மு. தனது ஒரிரு அதரவாளர்களை மு.கா. பட்டியலில் அன்று தேர்தல் களத்தில் இறக்கி இருந்தார் தி.மு.

அவர்களில் எவருமே வெற்றி பெறவில்லை. இதனை வைத்துக் கொண்டு அஸ்ரபை அவமதிப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் மு.கா. மௌனத்திற்கு என்ன பதில் தரப்போகின்றது என்தனை இப்போது பார்ப்போம!  

Share it:

Post A Comment:

0 comments: