ஒரு முஸ்லிம் மாவட்ட செயலாளரையாவது நியமியுங்கள் - உனைஸ் பாரூக், அவ்வாறு நியமித்தால் இலங்கையில் ஒருபோதும் ஒற்றுமையும், சமாதானமும் ஏற்படாது - அமைச்சர் ஜோன் செனவிரத்ன (வீடியோ)

Share it:
ad
நாட்டில், மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை எனவும் ஒரு முஸ்லிம் மாவட்ட செயலாளரையாவது நியமிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்டார்.

இதன்போது அவரது கருத்துக்களுக்கு அமைச்சர் டபிள்யூ டி ஜே செனவிரத்ன பதிலளித்தார்.

எமது நாட்டில் 10% முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்த வகையில் கூடுதலாக முஸ்லிம் மக்களிடம் என்றும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது, இந்த நாட்டில் 25 மாவட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், இந்த 25 மாவட்டங்களில் ஒரு முஸ்லிம் மாவட்ட அரசாங்க அதிபர் கூட இல்லாத குறை காணப்படுகின்றது. வட மாகாணத்தை எடுத்துக்கொண்டால், 33 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. அந்த 33 பிரதேச செயலகங்களிலும், ஒன்றில்கூட முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் காணப்படாத குறை காணப்படுகின்றது.

Share it:

Post A Comment:

0 comments: