அனுரகுமார திஸாநாயக்கவுக்கு, விடுக்கப்பட்டுள்ள சவால்..!

Share it:
ad
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பலபிட்டியில் 09-11-2014 நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முடியுமென்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளராக போட்டியிடட்டும். இது அனுரகுமாரவிற்கு விடுக்கப்படும் சவலாகும்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாதாரண கட்சியல்ல.

பழைய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எந்தப் பிரச்சினை வந்தாலும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்.

நாம் தேர்தல் நடத்த முயற்சிக்கும் போது சிலர் வேண்டாம் என்று கோசம் எழுப்புகின்றனர். ஜே.வி.பிதான் இவ்வாறு கோசம் எழுப்பத் தொடங்கியது. முடிந்தால் அனுரகுமார தேர்தலில் போட்டியிட்டு காட்டட்டும். கிடைக்கும் வாக்குகளை எண்ண முடியாத அளவிற்கு வெட்கித் தலைகுனிவார்கள்.

இதன் காரணமாகவே நாடு முழுவதிலும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். ஜே.வி.பி தற்போது முன்னாள் பிரதம நீதியரசரையும் இணைத்துக் கொண்டுள்ளனர். நான் இது பற்றி குறிப்பிடுவதனால் என்னை திருடன் என குறிப்பிடுவார்கள்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை கொலை செய்தவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்தது சந்திரிக்காவா, ரணிலா அல்லது வேறு தலைவர்களா?

முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதியை கூட்டங்களில் இழிவாக பேசி வருகின்றார். ஹெல்பிங் ஹேன்ட் வழக்கில் ஜனாதிபதிகு தண்டனை விதிக்காமைக்காக வருந்துவதாக சரத் என் சில்வா குறிப்பிட்டிருந்தார். மஹிந்தவை கைது செய்து சிறையில் அடைக்காமைக்காக வருந்துவதாக மேலும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ஜனாதிபதியை சிறையில் அடைக்க மக்கள் இடமளிப்பார்களா? நாட்டில் ஓடிய இரத்த வெள்ளத்தை தடுத்து நிறுத்திய ஜனாதிபதியை சிறையில் அடைக்க மக்கள் அனுமதிக்க மட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: