'சையத் அல்ஹுசைன் இலங்கையை நிந்திக்கிறார், பொறுமையிழந்து வார்த்தைகளை பயன்படுத்துகிறார்'

Share it:
ad
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் ஐநா வின்  இறைமையுள்ள தேசமொன்றை நிந்திக்கிறார். அத்துடன் அவர் பொறுமையிழந்து வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துகிறார். இவ்வாறு இலங்கை அரசாங்கம்  குற்றம்சாட்டியுள்ளது

இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் விடுத்திருந்த கடும் அறிக்கைக்கு பின்னர், அவருக்கு இலங்கை சார்பாகப் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பதில் கடிதத்தை, ஜெனீவாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநித ரவிநாத் ஆரியசிங்க அனுப்பிவைத்துள்ளார்.

 ஐ.நா. மனித உரிமை ஆணையரின் இவ்வாறான செயற்பாடுகள் ஐ.நாவுடனான ஆக்கபூர்வமான பேச்சுக்களை பாதிக்கும் என்று அந்தக் கடித்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நடத்தும் புலன் விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் ஹுசைன் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it:

Post A Comment:

0 comments: