கிழக்கு மாகாணசபையை அரசாங்கம் சீரழிக்கிறது - சுபைர்

Share it:
ad
-Tm-

கிழக்கு மாகாணசபைக்கு பொம்மையான முதலமைச்சர் ஒருவரை  வைத்து,  கிழக்கு மாகாணசபையை அரசாங்கம் சீரழிப்பதாக மக்கள் தங்களிடம் சுட்டிக்காட்டுவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபையில் தனித்து இயங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும்  அதற்கு பின்னரான சூழ்நிலை  தொடர்பில் வியாழக்கிழமை (27) கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

'கிழக்கு மாகாணசபைக்கு பொம்மையான முதலமைச்சர் ஒருவரை அரசாங்கம் வைத்துள்ளது. இதன் மூலம், கிழக்கு மாகாணசபையும் கிழக்கு மாகாணமும் சீரழிக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணசபையால், கிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள்  நிறைவேற்றப்படவில்லை. அத்துடன், அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்பவில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் தவறியுள்ளது போன்ற பல்வேறு விடயங்களை கிழக்கு மாகாண மக்கள் எம்மிடம் முன்வைக்கின்றனர்.

இவை தொடர்பில் எமது கட்சியின் அதியுயர்பீடக் கூட்டத்தின்போது,  எடுத்துக் கூறி  ஆலோசித்த  பின்னரே இந்தத் தீர்மானத்துக்கு நாம் வந்தோம்' எனக் கூறினார்.  

நீங்கள் எடுத்த தீர்மானத்துக்கு  பின்னர் அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் உங்களுடன் பேசினார்களா எனக் கேட்டபோது,  'எங்களுடன் பேச முற்படுகின்றார்கள். ஆனால், இது தொடர்பில் எங்களுடன் பேசாமல், எமது கட்சியின் தலைமையுடன் பேசுமாறு கூறியுள்ளோம். எமது கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்போம்.

கிழக்கு மாகாணசபையின் இரண்டு தடவை ஆட்சிக்காலத்திலும்; எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, கிழக்கு மாகாணசபையின்; ஸ்திரதன்மைக்கு பாரிய பங்களிப்பைச்  செய்துள்ளோம். ஆனால், எமது கட்சிக்கு அரசாங்கம்  வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை' எனவும் கூறினார். 
Share it:

Post A Comment:

0 comments: