'புதையுண்டவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டுமென்பதே எங்கள் விருப்பம்'

Share it:
ad
(Gtn)

மண்சரிவில் பலியான தங்களது குடும்பத்தவர்களுக்கு கௌரவமான இறுதி மரியாதையை செலுத்த வேண்டுமென்பதே தங்கள் விருப்பம் என அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக ஏ.பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பாரிய மண்சரிவு ஏற்பட்டு பல உயிர்களை காவுகொண்ட மலையகப்பகுதிகளில் மேலும் மண்சரிவு அபாயம் உள்ளதால் மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை அப்பகுதி மக்கள் தற்காலிக முகாம்களில் தங்களுக்கு இடமில்லை எனவும்,தாங்கள் செல்வதற்கு மாற்று இடங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர் எனவும் ஏ.பி(அசோசியேட்டட் பிரஸ்) செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இது குறித்து அது மேலும் தெரிவித்துள்ளதாவது.

அதிகாரிகள் மலையகப்பகுதிகளில் உள்ள ஏனைய ஆறு மாவட்டங்களை சேர்ந்த மக்களையும் மண்சரிவு குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுள்ளனர்.

அதிகாரிகள் சுமார் 100 பேர்வரை மண்சரிவால் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கும அதேவேளை பொதுமக்கள் 200ற்க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். பலியானவர்களின் எண்ணிக்கை இன்னமும் உறுதிப்படுத்த முடியாததாக காணப்படுகின்றது

மண்சரிவு இடம்பெற்ற தினத்திலிருந்து அதிகாரிகள் ஒன்றுக்குபின் ஒன்று முரணாண எண்ணிக்கைகளை  வெளியிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 250ற்க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்த அவர்கள் தற்போது காணமற்போனவா்கள்  மற்றும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 என்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள்,உட்பட்டவர்களை விசாரணை செய்த பின்னரே இது தெரியவந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்னமும் ஆபத்தான பகுதியில் வசிக்கும் 34 வயதான கண்ணுசாமி மகேந்திரன்-2002 ஆம் ஆண்டிலிருந்து பல தடவை மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும், அங்கிருந்து செல்வதற்கான மாற்று வீடில்லாமையே தங்களுக்கு பிரச்சினையாகவுள்ளது என்கிறார்.

அதிகாரிகள் இங்கு வந்து எங்களை போகச்சொல்கின்றனர், ஆனால் எங்கு போவது என அவர்கள் தெரிவிக்கவில்லை, என குறிப்பிடும் அவர் இன்னொரு பாரிய மண்சரிவு நிகழ்ந்தால் தாங்கள் பாரிய ஆபத்தில் சிக்க நேரிடும் என தெரிவிக்கின்றார்.

கடந்த சில வருடங்களில் தங்கள் பகுதியில் உள்ள 75 குடும்பங்களில் 25 குடும்பங்களுக்கு மாத்திரமே அரசாங்கம் வீடுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனையவர்களை கடந்த வார மண்சரிவிலிருந்து உயிர் தப்பியவர்கள் தங்கியுள்ள பாடசாலைகள், கோவில்கள் போன்றவற்றிற்க்கு செல்லுமாறு அரசாங்கம் கேட்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால் ஏற்கனவே மக்களால் நிரம்பிவழியும் அந்த முகாம்களுக்கு செல்ல முடியாத நிலையிலுள்ளோம் என்கிறார் அவர்.

தற்போது அந்த பாடசாலைகள் மற்றும் கோவில்களில் 1660 தங்கியுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்களில் பலரின் வீடுகள் ஆபத்தான பகுதிகளில் இருக்கின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கும் அதிகாரி உதய குமார அவர்களுக்கு இடவசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்க்கு எங்களால் முடிந்ததை செய்வோம் என்கிறார்.

வீடுகளை போல் அவர்களுக்கு வசதியை வழங்க முடியாது,எங்களால் முடிந்த வசதிகள் அனைத்தையும் வழங்குவோம்,அவர்கள் முதலில் தங்களது உயிர்களை பாதுகாப்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்கிறார் அந்த அதிகாரி.

இதேவளை தங்களது குடும்பத்தவர்களை தொலைத்தவர்கள் அதிகாரிகள்  மீட்புபணிகளை மேற்கொள்ளும் அதேவேளை  மிகவும் துயரத்துடன் காத்திருக்கின்றனர்.

மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கும் அதேவேளை தங்களது குடும்பத்தவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்தவேண்டுமென்பதே தங்களது விருப்பம் என்கின்றனா் மக்கள்.

அவர்கள் மிகவும் பரிதாபகரமான விதத்தில் பலியாகினர்,அவர்களுக்கு நாம் கௌரவமான இறுதி மரியாதையை செலுத்த விரும்புகின்றோம் என்கிறார்,மண்சரிவில் இரண்டு மகள்கள், பேரக்குழந்தை, உட்பட 6 பேரை பறிகொடுத்த சின்னையா யோகராஜன்,

இதேவேளை அழிவின் அளவு தெரியவந்துள்ளதை தொடர்ந்து அனாதைகளான குழந்தைகளை பொறுப்புபெடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இராமச்சந்திரன் கஜானியும் -14அவளது 12 சகோதரன் சுரேசும் தங்கள் பெற்றோர்களின் இறுதி நிமிடங்களை கண்களால் பார்த்துள்ளனர்.

நாங்கள் அன்று பாடசாலை செல்லவில்லை, திடீரென மக்கள் மண்சரிவு என சத்தமிட்டனர்,அப்பாவும் அம்மாவும் தங்களது ஆவணங்களை எடுக்க உள்ளே ஒடினர்,அதன்பின்னர் அவர்களை காணவில்லை என்கிறாள் கஜானி,
Share it:

Post A Comment:

0 comments: