ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்பதை, மஹிந்த ராஜபக்ஸ நிரூபித்துள்ளார்

Share it:
ad
வழக்குத் தொடரப்படும் என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரியுள்ளார் என பிரதமர் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவதனை தடுக்கும் நோக்கில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு ஜனாதிபதி சட்ட விளக்கம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டு கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றில் விளக்கம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்க முடியுமா மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்விகளையே அவர் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சட்ட விளக்கம் கோரப்பட்ட இரண்டு கேள்விகளும் தனிப்பட்ட ரீதியானதே தவிர, நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் கேட்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட விளக்கம் கோரியதன் மூலம் ஜனாதிபதி அரசியல் சாசன மீறலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியமா என ஜனாதிபதி உச்ச நீதிமன்றில் விளக்கம் கோருவதன் மூலம், அவர் போட்டியிடத் தகுதியற்றவர் என்பது நிரூபணமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: