'மஹிந்த ராஜபக்ஸவின் தனிப்பட்ட பிரச்சினைக்கு, உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரமுடியாது'

Share it:
ad
ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இப்படி கோருவதற்கு, அரசியலமைப்பில் இடமில்லை என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்தது. 

பத்தரமுல்லையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, இந்த தகவலை வெளியிட்டார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார். இதுவொரு தனிப்பட்ட  பிரச்சினையாகும். அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு அமையவேனும் மீண்டும் அவர் போட்டியிட முடியாது. இதனால், இதுவொரு பொதுப் பிரச்சினையல்ல. இது தொடர்பில் நீதிமன்றத்திடம் கேட்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை' என்று அவர் கூறினார். 

கடந்த காலங்களில் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு ஏற்றவாறு நீதிமன்ற கட்டமைப்பை கொண்டு நடத்தினர். ஆனால், இன்று உயர்நீதிமன்றத்துக்கு பாரிய பொறுப்பொன்று உள்ளது என்று அவர் கூறினார். 

ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கும். ராஜபக்ஷ நிர்வாகத்திலுள்ள சட்டவிரோத நடவடிக்களை தடுப்பது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கதைப்போம் என்று அநுர எம்.பி மேலும் கூறினார். 
Share it:

Post A Comment:

0 comments: