பொது வேட்பாளரை தேடும் சந்திரிக்கா..!

Share it:
ad
-Tm-

எதிர்கட்சிகள் யாவற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் ஒரு பொது வேலைத்திட்டத்தை அமைப்பதில், நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முக்கிய பங்கெடுத்து வருகிறார் என்று தெரியவருகிறது. 

ஆனால், அவர் திடீரென ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கட்சியகளிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துக்கு தலைமை தாங்கும் வண.மாதுலுவாவே சோபித தேரர், ஐ.தே.க உட்பட எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து வருகின்றார். இந்த கூட்டங்கள் கோட்டையிலுள்ள அவரது விகாரையில் நடைபெற்றது.

அரசாங்கத்துடன் கடும் அதிருப்தியுற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், ஏற்புடைய பொதுவேற்பாளர் நிறுத்தப்பட்டால் எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றார்கள் என்றும் அறியப்படுகின்றது.
Share it:

Post A Comment:

0 comments: