இலங்கை ஒத்துழைப்பு வழங்கவில்லை - சாடுகிறார் சயிட் அல்ஹுசைன்

Share it:
ad

ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குவதில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை இலங்கை நிராகரித்து வருவது கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியோர் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிப்போது அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலைமையானது ஐக்கிய நாடுகள் விசாரணைகளை மலினப்படுத்தும் முயற்சியாகவே நோக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான விடயங்களையும் மறைக்க வேண்டிய தேவையில்லாத அரசாங்கம் ஏன் சுயாதீன சர்வதேச விசாரணைகளை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009ம் ஆண்டின் பின்னர் சர்வதேச சுயாதீன விசாரணைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தடுத்து வருகின்றதாகத் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சாட்சியமளிப்பவர்களை தடுத்து நிறுத்தும் முனைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகள் தொழில்சார் தன்மையற்றது எனவும், பக்கச்சார்பானது எனவும் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பினர் சிறந்த தகுதிகளையும் தொழில்சார் திறமையும் கொண்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்தவொரு ஆவணப் படிவத்தையும் தயாரித்து அதன் ஊடாக சாட்சியங்களை திரட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியங்களை வழங்குவதற்கு எவருக்கும் பணக் கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உயர் தரமிக்க வழிமுறைகளில் விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சாட்சியங்களை வழங்கும் தரப்பினர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: