தான் கட்சியின் செயலாளர் என மைத்­தி­ரி­பால கூறிகொண்டிருப்பது அநாகரிகமான விடயம் - அமைச்சர் எஸ்.பி.

Share it:
ad
ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கவும் பொதுச் செய­லா­ள­ரா­கவும் நானே பதவி வகிக்­கின்றேன். கட்­சியின் உறுப்­பு­ரிமை மற்றும் பொதுச்செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள­போ­திலும் அவை சட்­ட­ரீ­தியில் நடை­பெ­ற­வில்லை என்று எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்திருந்தார். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்  என்ற வகையில் அவருக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் 26-11-2014 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் பொதுச் செயலாளராகவும் இருக்கின்றேன். என்னை கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியலிருந்து நீக்கப்பட்டதாக கூறியபோதும் அவை சட்டரீதியில் நடைபெறவில்லை என தெரிவித்திருக்கும்  பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு விளக்கம் ஒன்றை அளிக்க வேண்டும். அதாவது கட்சியின் அங்கத்தவர் ஒருவர் கட்சிக்கு எதிராகவோ அல்லது கட்சிக்கு கலங்கம் ஏற்படும்படி செயற்பட்டாலோ அவரை கட்சித் தலைவர் அவருடைய அதிகாரங்களை வைத்து பதவி நீக்கம் செய்ய முடியும். இதனையே ஜனாதிபதியும் செய்துள்ளார்.

மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக அனுரபிரியதர்சன யாப்பா நிமிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அவரும் ஏற்றுகொண்டார். இந்நிலையில் தான் தான் கட்சியின் பொதுச் செயலாளர் என கூறிகொண்டிருப்பது அநாகரிகமான விடயம் என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: