பொதுபல சேனாவை போன்று இராவணா பலய அமைப்பும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க போவதாக அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று 30-11-2014 நடைபெற்ற இராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க பௌத்த பிக்குகளை அணித்திரட்டப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வரும் பின்னணயில் புலம் பெயர் தமிழர்கள் இருப்பதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இராவணா பலய மற்றும் பொதுபல சேனா அமைப்புகள் கடந்த காலம் முழுவதும் சிறுபான்மை இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதுடன் இந்து, இஸ்லாமிய , கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளன.
இந்த அமைப்புகளுக்கு அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மேற்படி அமைப்புக்ள மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதன் மூலம் அந்த குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளதாக எதிரணி அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.



Post A Comment:
0 comments: