எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்காது என முஸ்லிம் காங்கிரஸின் உயர் வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
பொதுபல சேனா, ராவனபலய போன்ற பிரதான கடும்போக்குவாத பௌத்த சிங்கள அமைப்புக்கள் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்குமென்ற தீர்மானத்தை மேற்கொண்டிருக்கையில், முஸ்லிம் காங்கிரஸும் அவர்களுடன் இணைந்துகொள்ள முடியாதெனவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் முக்கியஸ்தர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க வேண்டுமாயின், முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள பிரதான 2 நிபந்தனைகளை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அறியவருகிறது.
குறிப்பாக 'முழுமையான கரையோர மாவட்டம்' மற்றும் பொதுபல சேனாவை தடை செய்தல் போன்ற நிபந்தனைகளை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாத நிலையிலும், முஸ்லிம் காங்கிரஸின் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் சிங்கள வாக்குகளை இழக்கவேண்டிவரும் என்பதாலும் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாது எனவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துவிட்டமையால், முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்காது என்ற இறுதித் தீர்மானம் மிகவிரைவில் வெளியாகுமென ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியமுடிகிறது.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானவர்களும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களில் பலரும், உயர்பீட உறுப்பினர்களில் பெரும்பாலோனோரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்ககூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு திட்டவட்டமாக தெரிவித்தன.

Post A Comment:
0 comments: