தடை ஏதும் உண்டா...? (கார்டூன் இணைக்கப்பட்டுள்ளது)

Share it:
ad
இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மற்றுமொரு தற்போதைய ஜனாதிபதிக்கு தடை ஏதும் உண்டா என விசாரித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறி விக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உச்சநீதிமன்றத்திடம் விடுத்துள்ள கோரிக்கை குறித்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டது.

இந்த விசாரணை தொடர்பாக தகவல்களை திரட்ட ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அரசமைப்பின் 129 (1) ஷரத்தின் பிரகாரம் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். இரண்டாவது பதவிக்காலம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி ஆரம்ப மாகியது.

அன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியான பின் மீண்டுமொரு முறை ஜனாதிபதியாக தெரிவாக மக்கள் அபிப்பிராயத்தை கோருவதற்காக 18ஆவது திருத்தமான அரசமைப்பின் 31(3) (ஏ) (1) யாப்புக்கு ஏற்ப தடை ஏதும் உள்ளதா? என விசாரித்து அறிந்து பிரகடனம் செய்யுமாறும் ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக காரணங் களை சமர்ப்பிப்பதற்கு இருந்தால் எதிர்வரும் 7ம் திகதி பகல் 3.00 மணிக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தின் பதிவா ளரிடம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கும் இலங்கை சட்ட அறிஞர்கள் சபைக்கும் நேற்று அறிவிக்கப்பட்டது.
Share it:

Post A Comment:

0 comments: