பொது வேட்பாளருக்காக ஒன்றுபட்ட கட்சிகள் (வீடியோ இணைப்பு)

Share it:
ad

ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதா என்பது தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது.

அது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று 10-11-2014 இன்று பிட்டகோட்டேயில் நடைபெற்றது.

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் மற்றும் 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் பலப்படுத்தல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் தொடர்பில் இவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இந்த பொதுவான திட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் மாதுலுவாவே சோபித்த தேரர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த சந்தர்ப்பத்திற்காக விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்ததுடன் அது ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.

Share it:

Post A Comment:

0 comments: