ன்.வித்தியாதரன் எழுதிய 'என் எழுத்தாயுதம்' நூல் வெளியீட்டு விழா

Share it:
ad
(அஸ்ரப் ஏ சமத்)

சுடரொளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் எழுதிய 'என் எழுத்தாயுதம்' நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை (09ஃ11ஃ2014) கொழும்பு பம்பலப்பிட்டியில்.சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் அமைச்சா்கள் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பிணா்கள் கலந்து கொண்டனா். அமைச்சா் ரவுப் ஹக்கீம். எதிா்கட்சித் தலைவா் ரணில் விக்கிரமசிங்க, இரா சம்பந்தன், ஏ.எச்.எம் அஸ்வா், கம்பவராதி சிரேஸ்ட சட்டத்தரணி கே.பி.தவராஜா மனோ கணேசன் இந் நிகழ்வு சுடா் ஒளி உதயம் பத்திரிகையின் ஸ்தாபகா் பாராளுமன்ற உறுப்பிணா் பி. சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. 

மனோ கனேசன் - பாராளுமன்ற உறுப்பிணர் ஹரீஸ் கரையோரமாவட்டம் கேட்பது நியாயத்தையும் வெளிப்படுத்தினார் ஆனால் இந்த அரசாங்கம் சிங்களவருக்கே தமிழ் மலையகப்பிரதேசத்தில் தமிழ்  முஸ்லீம் மெஜேரோட்டியை குறைப்பதற்கு நிருவாகங்களை உடைத்து சிங்கள மக்களுக்கே பிரதேச சபைகளையும், பிரதேச செயலகங்களையும் திறந்து வைத்து வருகின்றது. இதற்கு உதாரணமாக நுவரெலியா அம்பேட்டிய மற்றும் வவுனியா பிரதேசங்களும் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன தமிழ் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகளை குறைப்பதற்கு திட்டமிட்டு நடக்கின்றனர். ஆனால் தமிழ் முஸ்லீம் மக்களுக்காக  அவர்கள் மொழி ரீதியாக கேட்கும் மவாட்டத்திற்கு தயாரில்லை எனத் தெரிவித்தார்

ஏ.எச்.எம். அஸ்வர் - கரையோர மாவட்டத்தை முதலில் எதிர்ப்பவர்கள் ஜ.தேகட்சி பாராளுமன்ற உறுப்பிணர்கள் ஆனால் ஹரிசின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்துதான் பேசினேன்.

ரவுப் ஹக்கீம் - இந் நூலாசிரியர் விததியதரண் சட்டக்கல்லூரியின் படிக்கும் காலம் தொட்டு அவர் தினபதியில் நிருபராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்த காலம்  வரை எனது நட்பு இருந்து வருகின்றது.  இந்த நாட்டில் ஊடகம், தகவல்த்துறையில் எதனையும் சாதாரணதொரு மகன் தெரிந்து கொள்வதற்கான சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும்.  இந்த நூலில் நான் விடுதலைப்புலிகளோடு பேசிய சமாதாண பேச்சுக்களில் திரு வித்தியதாரண் அப்பப்போது தனது ஆசிரிய தலையங்கத்தில் செய்திகளை கேட்டு தெரிந்து கொள்வார்.

ரணில் விக்கிரமசிங்க 

இந்த நாட்டில் மொழிப் பிரச்சினை உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் ஹந்துநெத்தி கேள்வி எழுப்பினார் கொழும்பில் உள்ள திம்பிரிகாசயவில் உள்ள மாவட்டக்கச்சேரியில் தமிழ் மொழி பேச கருமாற்றக் உத்தியோகத்தர்கள் இல்லை. கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் கணிசமாக வாழும் ஒரு மாவட்டம். இது தான் இந்த நாட்டில் பிரச்சினை இவற்றை தீர்க்க வேண்டும். 17ஆவது அரசியல் யாப்புவை அமுல்படுத்த வேண்டும்.


Share it:

Post A Comment:

0 comments: