பௌத்த குருமார் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்க்கின்றேன் - பிரதமர்

Share it:
ad
பௌத்த குருமார் அரசியலுக்கு வந்த அதிகாரத்தை கைப்பற்றுவதை கடுமையாக எதிர்த்த பிரதமர் டி.எம். ஜயரத்ன அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதால் பௌத்த குருமாருக்கு பரிநிர்வாண நிலைமையை அடைய முடியாது என்றும் பிரதமர் இன்று சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் 2022 வரை இந்நாட்டின் ஜனாதிபதி மக்கள் அதனை தீர்மானித்துவிட்டனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சித்தார்த்த குமரன் தனது அரச வாழ்க்கையை துறந்து சுக போகங்களை தூக்கியெறிந்து விட்டு அதிகாரங்கள்  வேண்டாமென்று அரண்மனையை விட்டு வெளியேறி துறவியானார். பரிநிர்வாணம் பெற்றார். 

ஆனால் இன்று என்ன நடைபெறுகிறது. பௌத்த குருமார் அரசியலுக்கு வருகின்றனர். அதிகாரத்தை கைப்பற்றுகின்றனர். சுகபோகமாக வாழ்கின்றனர்.

எனவே பௌத்த குருமார் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்க்கின்றேன். அரசியலுக்கு வருவதால் பௌத்த குரு மாரால் பரிநிர்வாண நிலைமையை அடைய முடியாது என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: