நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ரத்து செய்யப்படுகின்றமையை அடிப்படையாகக் கொண்டு பொது இணக்கப்பாட்டிற்கு அமைய, பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி காரியாலயத்தில் இன்று 13-10-2014 இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அடிப்படை அரசியல் மற்றும் சமூக காரணிகள் உள்ளடக்கப்பட்ட பொது இணக்கப்பாட்டிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதேபோன்று, 13வது அரசியல் திருத்தத்தை செயல்படுத்தி சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவை ஸ்தாபித்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இந்த அடிப்படையில் பொது வேட்பாளர் ஒருவர் செயல்படுவாரானால், அவருக்கு ஆதரவினை வழங்க தயார்.



Post A Comment:
0 comments: