ஓரின சேர்க்கை, விபசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு IS நிறைவேற்றிய தண்டனை (படங்கள்)

Share it:
ad
ஈராக்- சிரியாவின் பல பகுதிகளை பிடித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் வாதிகள் அதனை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். தங்களுக்கு என போலீஸ் நிலையம் மற்றும் நாணயங்களை வெளியிட்டு உள்ளனர்.

இஸ்லாமிய அரசில் சிறிய குற்றங்களுக்கு கூட தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஒரு ஆண்  பெரிய கட்டிடத்தின் மீது இருந்து தூக்கி வீசி கொல்லப்பட்டுதண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளார். அது போல் விபசார தொழிலில் ஈடுபட்ட ஒரு பெண் கல்லால் அடித்து கொல்லப்பட்டு உள்ளார். இந்த தண்டனை நிறைவேற்ற படங்களை ஐ.எஸ் வெளியிட்டு உள்ளனர்.

இந்த படங்கள் சமூக இணையதளம் மூலம் வெளியிடபட்டு உள்ளது.

முதல் படம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டபட்ட 2 ஆண்களை  ஐ.எஸ். ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து தூக்கி வீசுகிறார்கள்.  இது 10 மாடி கட்டிடமாகும். இரண்டாவது படத்தில் விபசார குற்றம் சாட்டபட்ட பெண் பொது இடத்தில் கல்லால் அடிக்கபடுகிறார். அபோது  ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியுடன் ஒருவர அந்த பெண் மீது மிக்கபெரிய கல்லால் அடிக்கிறார். இந்த  தண்டனைகள் ஒரே நாளில்  நிறைவேற்றப்படுகின்றன.

இந்த படங்கள் கடந்த 15 ந்தேதி வெளியிடப்பட்டு உள்ளது.இந்த சம்பவங்கள் ஈராக்கின் 2 வது மிகப்பேரிய நகரமான மொசூலில் நடைபெற்று உள்ளது.இது ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ளது.




Share it:

Post A Comment:

0 comments: