தேர்தல்கள் ஆணையாளரின் சகோதரர், சுனந்த நாடு திரும்புகிறார்

Share it:
ad

வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களை நாடு திரும்மாறு இலங்கையில் புதிய அதிபராக மைத்ரி பால சிறீசேனா அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இலங்கை புதிய அரசின் அழைப்பை ஏற்று ஜெனிவாவில் இருந்து நாடு திரும்ப உள்ளதாக ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது,

 கடந்த கால ஆட்சியின் போது ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அடக்கு முறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசை வலியுறுத்துவது நமது கடமை, அதிபர் மைத்ரி பால சீறிசேனாவின் அரசு ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்ந்து விடாது என நம்பி 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: