மஹிந்த ஆட்சியை ஒப்படைத்தாரா..? இயலமையால் விட்டுச்சென்றாரா..?? கோத்தபய எங்கே..???

Share it:
ad
-Gtn-

வியாழக்கிழமை இரவு ஆரம்பகட்ட முடிவுகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு சாதகமாக வெளியானதும் என்ன நடைபெற்றது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ச தான் தோல்வியடையும் நிலை உருவாகலாம் என உணர்ந்ததும் அவசரகால நிலையை பிரகடனம் செய்து வாக்களிப்பை இரத்துச்செய்ய முயன்றார். அதற்காக  தனக்கு நெருக்கமான சிரேஸ்ட அமைச்சர்களுடன் அவசரமாக  உரையாடலை நடத்தினார். அதற்கு சிரேஸ்ட அமைச்சர்கள் இணங்கவில்லை. தொடர்ந்த இராணுவத் தளபதியுடனும் அராணுவ அதிகாரிகளுடனும் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். அவர்களும் மக்களின் தீர்ப்பை மீறி பலாத்காரமாக ஆட்சியை தொடர இடமளிக்கப் போவது இல்லை  என தெரிவித்துள்ளார்கள். பொலிஸ்தரப்பின் பெரும்பான்மை ஏற்கனவே எதிரணியுடன் நெருக்கமாக இருந்தது... கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளும் ஜனாதிபதியின் நகர்வை வரவேற்கவில்லை...

இறுதியாக அவசரகால நிலைப் பிரகடணத்திற்கான  ஆவணங்களை தயார் செய்யுமாறு சட்டமா அதிபரை கோரினார், எனினும் சட்டமா அதிபர் அதனை ஏற்கவில்லை. அதன் பின்னரே அவர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டார்.

ரணில் அவரின் செயலின் விபரீதத்தை எடுத்து விளக்கினார். இதற்கிடையில் முக்கிய இராஜதந்திரிகள் சிலரும் மகிந்தவை தொடர்புகொண்டு அவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என எச்சரித்தனர் , இதன்பின்னரே அவர் பதவிவிலக தீர்மானித்தார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாவே வாக்குகளை வெளியிடுவது தாமதமானது.

மகிந்த தற்போது அம்பாந்தோட்டைக்கு சென்று விட்டதகவும் கூறப்படுகிறது...

இதேவேளை பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் இன்று காலை மகிந்த ராஜபக்ச ஆராய்ந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமாவும், மாலைதீவிற்கு விமானம் மூலமா தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதும் இவர்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணமானதாக தெரியவருகின்றது. இந்தப் பதிவு கொழும்பின் முக்கிய மட்டங்களில் இருந்து வெளியாகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பதிவிடப்படுகிறது... 

இந்த விடயங்கள் யாவும் பரபரப்பாக பேசப்படும் அதே நேரம், ராஜபக்ஸ சகோதரர்கள்  தோல்வியை தாங்க முடியாமல் எத்தகைய நகர்வுகளை மேற்கொள்வார்கள் என்பதனை பரிந்துகொண்ட எதிரணியினர் அவர்களை சுற்றி இருந்த பாதுகாப்பு   அரண்களை மெதுவாக தகர்க்கும் பணியினை ஏற்கனவே ஆரம்பித்து இருந்ததாக எதிரணியின் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு படைகள், பொலிஸ் மட்டங்களில் உயர் மட்ட அதிகாரிகளில் இருந்த அடிமட்ட அதிகாரிகளை் வரையிலும், அரசாங்க அதிகாரிகள் மட்டத்திலும் எற்கனவே அட்சி மாற்றத்திற்கான பலமான அஸ்திவாரங்களை கட்டி எழுப்பி இருந்ததாகவும் அந்த முக்கியஸ்த்தர் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: