மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின், பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் பிடிபட்டன

Share it:
ad
ஜனாதிபதி மாளிகையிலிருந்த சில பொருட்கள் அடங்கிய இன்னும் இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

பேலியகொடை-நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்விரு கொள்கலன்களிலும் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன.  

அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இதுதொடர்பில் விசாரணை நடத்தியபோது, அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 
Share it:

Post A Comment:

0 comments: