மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிடத்திற்கு, ஜயசிங்க பண்டார

Share it:
ad
புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியபிரமாணம் செய்து கொண்டதையடுத்து, ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு பொலனறுவை மாவட்ட வாக்கு பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள ஜயசிங்க பண்டார நியமிக்கப்படவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த, இது தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளைய தினம் கொழும்பு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஜயசிங்க பண்டார தெரிவித்துள்ளார்

2010 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொது தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட நான்கு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானர்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரொஷான் ரணசிங்ஹ, சிரிபால கமலத் மற்றும் சந்ரசிறி சூரியஆராச்சி ஆகியோர் தெரிவானர்.

இந்தநிலையில், ஐந்தாம் இடத்தில் உள்ள ஜயசிங்ஹ பண்டார 21 ஆயிரத்து 876 வாக்குகளை பெற்று கொண்டார்.

இதற்கமைய, இன்றைய தினம் தமது பெயர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஜயசிங்ஹ பண்டார தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: