'மைத்திரிபால ஏற்படுத்திய மாற்றம், ஹாலிவுட் படைப்பாளியைகூட பொறாமைப்படவைத்திருக்கும்'

Share it:
ad
 
-ரிறிவர் கிராண்ட் எழுதிய இந்த கட்டுரையினை தமிழில் தருவது GTN-

 ஆட்சிக்கு மைத்திரிபால சிறிசேன மாறியதானது கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மிகவும் வெற்றிகரமான தேர்தலாக நவீன வரலாற்றில் பதிவாகின்றது.

இந்த வாரம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் சிறிசேன ஏற்படுத்திய மாற்றம் ஆனது மிக திறமையான ஹாலிவுட் படைப்பாளியை கூட பொறாமைப்பட வைத்திருக்கும். 

ஊழல் மிகுந்த, காட்டுமிராண்டித் தனமான, வளைந்து கொடுக்காத, சர்வாதிகார நிர்வாகம் என்ற முகம் சமத்துவமும் கருணையும் உள்ள முகம் போல மாறியிருக்கின்றது.

ஒரு பத்திரிகையாளனாக எனது 45 ஆண்டுகள் கசப்பான அனுபவம் உலகில் நடந்தேறும் எவ்வகையான அரசியல் சந்தர்ப்பவாதங்களையும் எதிர்வுகூற கற்றுக்கொடுத்துள்ளது. ஆனால் இந்த மனிதன் இந்த பள்ளத்தில் மிகவும் அமைதியாக தீர்மானித்து காலடி வைத்து, தான் நீண்டகாலமாக முழுமனதுடன் ஆதரித்தவை எல்லாவற்றையும் தூக்கியெறியும் வேலையை உடனடியாக ஆரம்பித்திருக்கின்றமை ஒரு புதிரே.

அநேகமாக எல்லோரும், அதாவது இலங்கையிலும் அதற்கு அப்பாலும், சனாதிபதி அலுவலகத்தில் திடீரென தோன்றிய இந்த புதிய மயக்கும் முகத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.   

இந்த முகமூடி தவிர்க்க முடியாமல் மறையும் போது எது வெளிப்படும்? சீர்திருத்தவாதி என்று நினைக்கப்படும் இந்த புதிய சனாதிபதியானவர் இருண்ட கடந்த கால மற்றும் நிகழ்காலத்தை கொண்ட, இனப்படுகொலையை  இழைத்து சர்வதேச அளவில் பெயர்பெற்ற இலங்கையில் எவ்வளவு தூரத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றார்?

இதற்கான விடையை சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை உற்று நோக்குவதன் மூலம் அறியலாம். அதாவது, தமிழர்கள் அவர்களுடைய பாரம்பரிய தேசங்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளாவது உள்ளிட்ட எந்தவொரு முக்கிய தமிழர்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக எந்தவொரு குறிப்புக்களும் சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை.

தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க மறுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களின் நிலைப்பாட்டை இது சான்றாதார பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது. அதாவது, நாட்டிலுள்ள எல்லாவிதமான பிரச்சனைகள் குறித்தும் பேசப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிக மிக முக்கியமான எல்லாவற்றிற்கும் தலையாய பிரச்சனையான நீண்டகாலமாக தொடரும் தமிழரின் இனப்பிரச்சனை தொடர்பில் எதுவுமே பேசப்படவில்லை.  

கலந்துரையாடப்படும் என நாம் எதிர்பார்த்த, நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சனையை, அதாவது வழமையாக அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழிகளில் குறிப்பிடும் விடையத்தை, சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் துச்சமாகவே மதித்துள்ளது. ஆட்சிக்கு வந்த பின்பும் இது தொடர்பாக சிறிதளவேனும் சிறிசேனா பேசவில்லை.     

இவ்வாறு, சிறிசேன இரக்கம், கருணை, மனித உரிமைகள் ஊழல் மற்றும் பாரபட்சம் போன்றவற்றை ஒழித்தல் போன்ற நாட்டிலுள்ள பிரச்சனைகளையே கையில் எடுத்துள்ளார்.

சிறிசேன இவற்றை மட்டுமே செய்வார். ஏனென்றால் நாட்டின் பெரும்பான்மையானது தமிழ் இனவழிப்பு தொடர்பாக பாராமுகமாக இருப்பதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே கற்றுவிட்டது. உண்மையை அறிய விரும்பும் மிகச் சில சிங்கள ஆன்மாக்களும் அதனை அறிய முடியாது. ஏனெனில் ஊடகங்கள் ஒன்றில் பயத்தினை தமது தோள்களில் சுமந்துகொண்டு சுயதணிக்கையை செய்து கொள்கின்றன அல்லது இந்த உலகத்தில் சனாதிபதி அதிகாரத்தை வழிபடும் இந்த வெட்கம் கெட்ட நாட்டில் அப்படியே இருப்பதில் திருப்தி கொண்டுள்ளன. 

உண்மை என்னவெனில், தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் சிறிசேனவிற்கு எந்தவொரு அக்கறையும் இல்லை. யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த இவரின் முன்னோடியின் பாதையையே தமிழ் மக்கள் விடையத்தில் சிறிசேனா தொடர அதிக வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால் அதன் தீவிரத்தன்மை இவரிற்கு முன்னால் இருந்தவரிலும் பார்க்க சற்று குறைவாகவே இருக்கும்.

இதன் அர்த்தம் என்னவெனில், 70,000 அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பான ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை கடும்போக்கு சிங்கள தேசியவாதம் நிராகரிக்கும். 2009 இல் முள்ளிவாய்க்கால் மண்ணில் 70,000 அப்பாவி தமிழ் மக்களை கொன்றழித்துவிட்டும் அதனை பூச்சிய இழப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானப் பணியை நிறைவு செய்ததாக ராஜபக்ச பிரகடனம் செய்த நாளிலிருந்து ராஜபக்ச செய்து வந்தது போலவே கடும்போக்கு சிங்கள தேசியவாதத்தை சிறிசேனா பயன்படுத்துவார். 

இந்தப் பிரச்சனையின் உண்மைநிலைக்கு அருகில் கூட சிறிசேனாவால் போக முடியாது. ஏனெனில் நாம் எல்லோரும் அறிந்தது போல் இப்பிரச்சனை அவரது கழுத்து மட்டத்தில் இருக்கின்றது. யுத்தத்தின் இறுதி வாரங்களில் அவர் அப்போதைய தற்காலிக  பாதுகாப்பு அமைச்சராக அதாவது கட்டளை பிறப்பிக்கும் உயர் நிலையில் இருந்துள்ளார். இதனால், இவரும் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவரே. எனவே போர் குற்றங்கள் விசாரணையை நிராகரிப்பதில் ராஜபக்சவின் கொள்கை தொடரும் என சிறிசேனா அறிவித்ததில் யார் ஆச்சரியம் அடைந்திருக்க முடியம்? ஹேக் நகரில் ஒரு சிறைக் கூண்டில் முடிவிற்கு வருவது பற்றியதான பீதியினை இவர் தனது முன்னோடியுடன் பகிர்ந்து கொள்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சுய-பாதுகாப்பு என்பது எல்லோரையும் தூண்டும் ஒரு சக்தி வாய்ந்த தூண்டுதலாகும். இது அரசியலிலும் விதிவிலக்கல்ல. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ராஜபக்சவை கொண்டு செல்ல எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் நிறுத்த தன்னாலான அத்தனையையும் சிறிசேனா செய்வார். (அங்கே வழக்கை கொண்டு செல்வது கடினமாக இருக்கும். ஏனெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையானது பரிந்துரை செய்ய வேண்டும். பூகோள-அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு இதனை “வீட்டோ” அதிகாரமுள்ள சீனா, ரஷ்யா மற்றும் சிலசமயம் இங்கிலாந்து கூட இதனை தடுக்கும்.)

தானும் ராஜபக்ச போலவே 70,000 தமிழர்களின் குருதியில் கைநனைத்தவர் என்பதை தமிழர்கள் மறக்கச் செய்ய அப்பட்டமான பொய்மைகளையும், குழப்பங்களையும், போலித்தனங்களையும் பதவிக்கு வந்தபின் மேற்கொள்வது சிறிசேனாவின் திட்டமாக இருக்கும். இதற்கு நல்ல ஆசானும் இவருடன் இருப்பதால் அது மிகவும் கடினமாக இருக்காது.

நிச்சயமாக, இதற்கு ஒரு மாற்று வழிமுறையும் உள்ளது. அவர் கருணை, மனித உரிமைகளைப் பற்றி கூறியதன் பொருள் என்ன என்பது குறித்து காட்ட ஆரம்பிக்கலாம். ராஜபக்சவினால் தமிழினவழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் காட்டுமிராண்டித் தனமான இராணுவ ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் தனது ஆறு ஆண்டு பதவிக்காலத்தை சிறிசேனாவால் தொடங்க முடியும்.  

சிங்களக் குடியேற்றங்களினாலும் இராணுவத்தினராலும் தமிழர் நிலங்கள் களவாடப்படுவதை இவரால் முடிவிற்கு கொண்டு வர முடியும். தமிழர் கோவில்களும் நினைவிடங்களும் அழிக்கப்படுவதை இவரால் தடுக்க முடியும். தமிழர்கள் காணாமல் போவதையும் போரினால் விதவைகளாக்கப்பட்டவர்களும் சிறுமிகளும் இராணுவத்தால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதையும் இவரால் தடுக்க முடியும். விட்டுக்கொடுக்க முடியாத தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதன் மூலம் இவரால் இவற்றை முடிவிற்கு கொண்டு வரமுடியும்.

அப்படியெனில், ஏனைய இனக்குழுமங்கள் போல தமிழர்களும் சமமாக நடத்தப்படுவதான நீதியும் நியாயமுமான உலகம் எமக்கு கிடைக்கும். இந்த கருத்து சாதாரணமாக எந்தவொரு சிங்களப் பேரினவாதியின் மனங்களிலும் இருக்காது. கருணையானவர் போல் தோற்றமளிக்கும் மைத்திரிபால சிறிசேன போன்றோரும் இதற்கு விதிவிலக்கல்லவே.  
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

மஹிந்த பதுங்குவது, பாய்வதற்கா...?

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­விக்குப் பின்­னரும், நானே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தலைமை தாங்­குவேன் என்

WadapulaNews