பரபரப்பான சூழ்நிலையில், கிழக்கு மாகாண சபை இன்று கூடுகிறது

Share it:
ad
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (12) திங்கட்கிழமை இடம்பெறுவதாக கிழக்கு மாகாண சபை பேரவை செயலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

கிழக்கு மாகாண ஆளும் கட்சியில் இருந்த உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், பிரியந்த பத்திரண, சிப்லி பாறூக், எம்.எஸ்.எஸ். அமீர் அலி, எம்.எஸ். சுபைர் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்ததை தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று (12) கூடும் கிழக்கு மாகாண சபையின் 2015க்கான வரவு செலவுத் திட்டத்தை ஏகமனதாக அங்கீகரிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த பட்ஜட்டை அங்கீகரிக்காவிட்டால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையேற்படுவதுடன் அமைச்சுக்கள் திணைக்களங்களின் நிருவாக நடவடிக்கைகளும் நடைபெற முடியாத நிலையேற்படுமென அவர் சுட்டிக் காட்டினார். இதன் பின்னர் புதிய மாகாண அமைச்சரவை மற்றும் முதலமைச்சர் என்பன புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதும் பதவியேற்கவுள்ளனர்.
Share it:

Post A Comment:

0 comments: