-முஆஸ் ஸித்தீக்-
இஸ்லாத்துக்கென்றே சில தனித்துவங்கள் இருக்கின்றன. அவை பிற மதங்களில் வலியுறுத்தப்படவில்லை. அவற்றில் பிரதானமானதே மரியாதை, கௌரவம், அமைதி, நிதானம் என்பன.
அவமரியாதையையோ, அகௌரவத்தையோ ஏற்படுத்தும் அத்தனை செயல்களை விட்டும், அவசரம், நிதானமின்மை போன்ற குணங்களை விட்டும் மனிதனைப் பாதுகாக்கும் மார்க்கமே இஸ்லாம். இதனை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையிலிருந்து நாம் படிக்கலாம். இதற்கு சான்று ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளம். பிறந்த தாய் நாட்டில் இனியும் வாழவே முடியாது என்றே நபியவர்கள் ஸஹாபாக்கள் சகிதம் ஹிஜ்ரத்தை மேற்கொண்டார்கள். பல முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றனர். நிம்மதியாகத் தொழ முடியாது. பல ஸஹாபாக்களை அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டு வாட்டி வதைக்கப்படுகின்றனர். ஸுமையா (ரழி) அவர்களின் மர்மத்தானத்தில் ஈட்டியால் குத்தியே அவர்களைப் படுகொலை செய்தார்கள். யாஸிர் (ரழி) அவர்களின் முழுக் குடும்பமும் சித்திரவதை செய்யப்படுகின்றனர். எங்கும் அவலம். துன்பங்களோ சொல்லும் தரத்தில் இருக்கவில்லை. ஹிஜ்ரத் சென்ற பின்பும் இன வெறியர்களின் முழுமையாக அடங்கவில்லை. இப்படியே காலங்கள் யுத்தங்களோடு காலங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு மக்கா வெற்றிகொள்ளப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு தங்களால் முடிந்த முடிந்த விதங்களிலெல்லாம் தொந்தரவும் சித்திரவதையும் அளித்த அபூஸுப்யான், ஹாரிஸ் பின் ஹிசாம், இதாப் இப்னு உஸைத் மற்றும் பல குறைசித் தலைவர்கள் வசமாக மாட்டிக்கொண்டு தங்கள் கழுத்துகள் சீவப்படப்போகின்றன என கற்பனை செய்து கொண்டுள்ள நேரம் அது. அந்த நேரம் அவர்களை அடித்தே கொலை செய்வதற்கு நபியவர்கள் ஓர் உத்தரவிட்டிருந்தாலே போதும். ஸஹாபாக்கள் ஒரு கை பாத்திருப்பார்கள். ஆனால், தன் சொந்த நாட்டை விட்டும் துறத்தியவர்களே, தனது தோழர்கள் பலரை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தவர்களே என்று பார்க்காமல் மனிதர்களில் நாம் புனிதர்கள் என்பதற்கு உலகமே சான்று பகர ஒரே வார்த்தை தான் சொன்னார்கள். ''இன்று உங்கள் எவர் மீதம் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படமாட்டாது, நீங்கள் விடுதலை பெற்றுச் செல்லலாம்'' ஸுப்ஹானல்லாஹ்.
இதே போன்று தான் முஸ்லிம்களுக்கு பல்வேறு அநியாயங்களைப் புரிந்து கொண்டிருந்த ஓர் கூட்டத்தினரின் தலைவர் ஸுமாமா இப்னு உஸால் என்பவர். ஒரு சமயம் நபித் தோழர்கள் இவரைக் கைது செய்து மஸ்ஜிதுன் நபவியின் தூண் ஒன்றில் கட்டி வைத்தனர். நபியவர்கள் வந்து பார்த்து மூன்று தினங்களுக்கு அவ்வாறே வைக்குமாறு பனித்து விட்டனர். மூன்று நாட்களாக ரஸுலுள்ளாஹ்வினதும், ஸஹாபாக்களினதும் பண்பாட்டை அவதானிக்கின்றார். (சிறைக் கைதிகளை அவர்கள் எப்படி எப்படி எல்லாம் அநீதி செய்திருப்பார்கள் என்பதை ஒரு கனம் அவர் ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்) மூன்று நாட்கள் கழிய நபியவர்கள் ஸுமாமா உங்கள் நிலை என்ன? எனக் கேட்டதற்கு அவர் இஸ்லாத்துக்கு வருவதாகக் கூறவில்லை. (அவருடைய கூட்டத்தோடு போய் சேரட்டும் என்ற வகையில்) கொலை செய்துவிடவும் பொருத்தமான அவரை (எத்தத் தண்டனையும் வழங்காமல்) அவிழ்த்துவிடுமாறு நபியவர்கள் ஸஹாபாக்களை வேண்டி அவர் அவிழ்த்துவிடப்பட்டார். அவர் குளித்து சுத்தமாகி வந்து நபியவர்களிடம் இஸ்லாத்தை ஏற்கின்றார்.
இன்னும் ஏராளமான சம்பவங்கள்.
இது தான் நபியவர்கள் வெற்றி கொண்ட யுத்த வெற்றிகளின்போது நடந்துகொண்ட முறையும், பிற சமூகத்திடம் காட்டிய தன்னிகரற்ற பண்பாடும்.
இன்று எமக்கெதிராக செய்யப்பட்ட அத்தனை அநியாயங்களையும், அட்டூழியங்களையும் ரஸுலுள்ளாஹ்வுக்கும், நபித்தோழர்களுக்கும் அனறைய காபிர்கள் செய்தவற்றோடு ஒப்பிட்டால் இவைகள் அனைத்தும் ஒரு சிறு துளியே என்றால் மிகையாகாது. ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் அழுது, தொழுது, கெஞ்சிக் கேட்ட பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்று எமக்காகக் குரல் கொடுக்கத் தவறிய ஓர் ஜனாதிபதியை அல்லாஹ் தோல்லியுறச் செய்து இன்ஷh அல்லாஹ் எமக்கு நன்மை செய்வார் என எதிர்பார்க்கும் ஒருவரை ஆட்சியில் அமர்த்தியுள்ளான்.
ஆனாலும் இன்று முஸ்லிம்கள் நடந்துகொள்ளும் வெற்றிக் களிப்புக் கொண்டாட்டங்களைப் பார்க்கும் எமது முஸ்லிம்களே இவை எதிர் காலத்தில் எமக்கே நாம் இழைத்துக்கொள்ளும் அவலங்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மைத்திரி அவர்களின் வெற்றிக்காக தமிழர்களின் பங்கும் மகத்தானது. ஆனால் அவர்கள் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கின்றனர்.
பௌத்த மக்களில் வாக்குகளும் மைத்திரி அவர்களின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளது என்பதை எவர்தான் மூடி மறைக்க முடியும்..?
எனவே ஊரிலுள்ள தலைவர்கள், நலன் விரும்பிகள் தேவையற்ற விதத்தில் நடக்கும் நமது சகோதரர்களைக் கட்டுப்படுத்துவதும், எம்மால் பெற்ற வெற்றி என்ற கோசத்தைத் தவிர்த்து இனவாதத்துக்கு எதிராக மூவின மக்களும் அளித்த வாக்கினாலே மைத்திரி வெற்றி பெற்றார் என்ற உண்மையை மக்களுக்கு உணர்த்துவதும் இன்றியமையாததாகும்.
எமது தவறான நடவடிக்கைகளை தொலைத் தொடர்ப்பு சாதனங்களில் பார்த்து பௌத்தர்களில் பெரும் பகுதியினர் நாம் மைத்திரிக்கு அளித்த வாக்கு அநாவசிமானது என்ற உணர்வைத் தோற்றுவித்தால் அடுத்த பாராளு மன்றத் தேர்தலின் போது பொது எதிரணி தோல்வியுற்றால் நாம் சந்திக்க வேண்டிய நஷ;டங்கள் அணையை உடைத்துப் பாயும் வெள்ளம்போன்றது என்பதை மாத்திரம் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
சிந்தித்து நடப்போம்.


.jpg)
Post A Comment:
0 comments: