பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கி யிருந்த நபர் ஒருவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சில நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் இஸ்லாமா பாத்துக்கு அருகே, டக்ஸிலா என்ற நகரில் வசித்துவந்த அபித் மெஹ்மூத் 3 ஆண்டு களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். தன்னை இறை தூதர் என்று அழைத்துக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.
புத்தி சுவாதீனமற்றவர் என்று மருத்துவர்கள் அறிவித்ததை அடுத்து, அவர் அண்மையில் விடுவிக்கப்பட்டார். இவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தெளிவில்லை. எனினும் பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் கொலைசெய்யப்படும் ஆபத்து உள்ளது.
பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றத்திற்கு, மரண தண்டனை உட்பட மிகக் கடுமையான தண்டனை அளிக்கக்கூடிய கடுமையான சட்டம் நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையே கொலையுண்ட அபித் மெஹ்மூதின் உடலை உள்@ர் மையவாடியில் அடக்கம் செய்ய மதத் தலைவர்கள் சிலரும் உள்@ர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டின் பின்புறத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


.jpg)
Post A Comment:
0 comments: