-தமிழில் GTN
பி.பி.சி செய்திகளிற்காக சாள்ஸ் கவிலாண்ட்-
ராஜபக்சஆதரவாளர்கள்அவரை "ராஜா" என குறிப்பிடுவது வழமை. மஹிந்த ராஜபக்சதான் வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் மூன்றாவது தடவையாக மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டியவர் என நம்புகிறார். ஆனால் ராஜபக்சமற்றும் அவரது சகோதரர்களின்கீழ் இலங்கை எப்படியானதொரு ஒரு நாடாகமாறி இருக்கிறது?
சென்ற மாதம் ஒரு நாள், ஆறு சோதிடர்கள்சனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகும் வெற்றிவாய்ப்புக்கள் பற்றி எதிர்வுகூறும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்றை அரச தொலைக் காட்சியில் நிகழ்ச்சியாக செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்த ஆறு சோதிடர்களும் உறுதியாக கூறினார்கள் , சனாதிபதி ராஜபக்ச வருகின்ற தேர்தலில் ஒரு அற்புதமான வெற்றியை பெறுவதோடு அவரை எதிர்த்து நின்றோர் எவரெனினும் இயற்கை அவர்களிற்கு முற்றிலும் எதிராக வேலை செய்யும் என்று. அவரது ஆதரவாளர்கள் அவரை "ராஜா" என அழைக்கும் அளவிற்குகிட்டத்தட்ட ஒரு தசாப்தம் இலங்கையின் தன்னிகரற்ற தலைவராக மகிந்தராஜபக்ச இருந்தார். பண்டைய காலங்களில் வெற்றி பெற்ற ஒருசிங்கள மன்னருடன் அவர் அடிக்கடி ஒப்பிடப்பட்டார்.
மிகவும் நீண்ட காலத்திற்கு முன்புஅல்லாது,அண்மையில் அரசாங்கத் தொலைக்காட்சியில் எப்படி "ராஜா" தமிழ் புலிகளிடம்இருந்து நாட்டைப் பாதுகாத்தார் என சித்தரிக்கும் தாலாட்டுப் பாணியிலான பாடல் இடம்பெற்றது.
உண்மையும்பயப்பட வேண்டியதும் என்னவெனில், அவருடைய மூன்று சகோதரர்கள் முறையே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களது அதிகாரப்போக்கு குறித்து முன்பு யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் இப்போது, "மன்னன்" பிரச்சனையில்இருக்கலாம்.
அவரிற்கு சவாலான ஒருவர் எதிர்த்தரப்பு வேட்பாளராக சனாதிபதித் தேர்தலில் வருவதற்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும் என்பது போல அவர் சடுதியாக திடீர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். ராஜபக்சகட்சியின் அதி முக்கிய உறுப்பினராக இருந்தமூத்த அரசியல்வாதியான மைத்திரிபால சிறிசேன அவர்கள் சனாதிபதிப் பாரம்பரியமோ அதற்கான கவர்ச்சி எதுவும் அற்றவர்.
சிங்களமையப் பகுதியின் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த இவரின் பெயர் பாரிய எதிர்வேட்பாளர் அணியின் தலைவரென இறுதித் தருணம் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டது. இவரை தொடர்ந்து பல மற்றைய ஆளும்கட்சிமுக்கியஸ்தர்களும் கட்சியிலிருந்து வெளியேறி இவர் பின்னால் திரண்டனர்.
கட்சி தாவல் என்பது இலங்கையில் சாதாரணமான தொன்று. ஆனால், சமீபத்தைய ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்துகட்சி தாவல்களும் அரசாங்கத் தரப்பை நோக்கி இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலை கீழாக மாறி இருக்கிறது. ஆளுங் கட்சியிலிருந்து எதிர்த்தரப்பிற்கு கட்சித் தாவல் நடக்கின்றது. இதனை துரோகம் என்றும் காட்டிக்கொடுப்பு என்றும் அரசுதரப்பு கூறி வருகின்றது.
யூதாஸ் இஸ்காரியோத்து இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த பின்தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்தது போன்று, மைத்திரிபாலவும் தனது தோல்வியின் பின்னர் இக்கட்டை எதிர்கொள்வார் என்று அரசுக்கு சொந்தமான சண்டே ஒப்சேவர் என்ற பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. வாக்காளர்கள் இந்த துரோகிகளிற்கு அவர்களது உயிர்களை பாடங்களாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அப்பத்திரிகை மேலும் கூறியுள்ளது.
ஆனால் 69 வயதான சனாதிபதி திடீரென இளைத்துப் போன வராகவும் பலவீனமானவராகவும் தென்படுகிறார். அவரால் பாதியிலேயே ஒரு சமீபத்தியதேர்தல் பிரசாரக் கூட்டத்தைக் கூடகைவிட நேர்ந்தது.
மைத்திரிபால சிறிசேனகளனியில் உள்ளஒரு விகாரைக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளும் போது, இலங்கை அரசியல் ரீதியாக பிளவுபட்டுக் கிடக்கின்றது. தசாப்தங்களாக, சிங்களப் பெரும்பான்மையினருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையேயான பிளவுகள்வன் முறையாகவும் யுத்தமாகவும் நடந்தது.
யுத்தத்தில் வென்றமைக்காகவும்மற்றும் போருக்குப் பிந்தையஉள்கட்டமைப்புநடவடிக்கைகளை மேற்கொண்ட மைக்காகவும் ஜனாதிபதியை இன்னமும்பலர் போற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் மகிந்தவை வெளியேற்ற விரும்புகின்றனர். சிங்கள-பௌத்த மேலாதிக்க கட்டமைப்புள்ள இலங்கை அரசானது தம்மை ஓரங்கட்டுவதாக தமிழர்கள் உணர்கின்றார்கள்.
ராஜபக்சாக்களின் ஒத்தாசையுடனான சிங்கள கடும்போக்கு பௌத்த பிக்குகளின் தாக்குதல்களால் முஸ்லிம்கள் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால்திருசிறிசேன கொண்டு வரப்போகும் மாற்றம்எத்தகைய அர்த்தமுள்ளதாக இருக்கும்?
பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள்தாம் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவே நம்புகின்றார்கள். ஊழல் எதிர்ப்புமற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பவற்றை தேர்தல் விஞ்ஞாபனத்தில்நிறுத்தி, மைத்திரி பாரிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார். தமிழர்களின் கடந்த காலத்தில் தமிழரிற்கு ஏற்பட்ட அல்லல்களிற்காக மன்னிப்பு கோரியமுன்னால் சனாதிபதியும் இந்தக் கூட்டணியில் உள்ளார்.
அத்துடன், இந்தக் கூட்டணியானது, ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள்போரின் இறுதிகட்ட குண்டுத்தாக்குதல்களில் இறந்தார்கள் என்ற நன்குசான்றாதாரபூர்வமாக உறுதிப்படுத்திய விடயத்தை அடியோடு ஏற்றுக்கொள்ள மறுக்கும் கடும்போக்கு பௌத்த தேசியவாத கட்சியிணையும் தமது கூட்டணியில் அரவணைத்து வைத்திருக்கின்றது.
இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றியோ அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றியோ எதுவும் தெரிவிக்காத திருசிறிசேன, எந்தவொரு அரசியல் தலைவரும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரனைக்குள்ளாக அனுமதியளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் என்னவாறான ஓட்டைகள் இருந்தாலும், திருசிறிசேனவேகமாக முன்னிலை வகித்து வருகின்றார். ஆனால் அரசாங்கமானது இதுவரைஅசைந்து கொடுக்காதஒன்றாக காணப்படுவது போல தெரிகிறது. எதிர்க்கட்சிக்கு தாவும்எண்ணிக்கைஅதிகரித்த நிலையில், “தவறு செய்பவர்கள்மீதுகோப்புகள் உள்ளன. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக அவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை” என அச்சுறுத்தும் வகையில்சனாதிபதி மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் முன்னதாக தனது நெருங்கிய சகாக்களுடன் இருந்த மகிந்த. இரு தரப்பும் பிரசாரத்திற்காக பிரபலங்களைப் பயன்படுத்துகின்றார்கள்.
ராஜபக்சகூட்டணியில் இருந்தமுக்கியமுஸ்லீம் அரசியல் வாதிகள் இப்போதுஅவரைக் கைவிட்டு விட்டனர். “ராஜபக்ச அரசாங்கமானது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிற்கு "வலி மற்றும் துன்பத்தை" மட்டுமே கொடுத்துள்ளது. எனவே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் திருசிறிசேனவிற் கேவாக்களிக்க வேண்டும்” என்று பிரதான தமிழ்எதிர்க் கட்சியானதமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
சிறுபான்மையினரிற்கு அப்பால், பல இலங்கையர்கள்அதிகரித்து வரும் வாழ்க்கை செலவாலும் அரசியல் அடாவடித்தனங்களாலும் வன்முறைகளாலும் மிகவும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போதுபல நடிகர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்கள்அரசாங்கத்திற்கு எதிராகபிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அவர்களின் பேரணிகளின் போது அவர்கள் அரசாங்க சார்புகும்பல் மூலம்தாக்கப்பட்டு காயமடைந்தும் உள்ளனர். மற்றும் தேர்தல் முறைகேடாக இராணுவவமானது அரச பணத்தைப் பயன்படுத்தி மகிந்தவிற்கு ஆதரவான பிரசுரங்களை நூறாயிரக்கணக்கான சிப்பாய்களின் குடும்பங்களிற்கு அனுப்பியமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த தேர்தலில்எல்லாவிதமும் விளையாடுகின்றது. ராஜபக்சவால் இன்ன மும்வெல்ல முடியும்.
ஆனால், சோதிட எதிர்வுகூறல் கூறியது போல் அல்லாமல் "மகிந்த ராஜா", தான் தோல்வியடைய நேர்கையில் தனது மகுடத்தைதொந்தரவு இல்லாமல்ஒப்படைப்பாரா? தனது இந்தசக்திவாய்ந்த குடும்பத்துடன் அமைதியாகசெல்வாரா? என இலங்கையர்கள்அதிசயித்து நிற்கின்றார்கள்.
Post A Comment:
0 comments: