(சுலைமான் றாபி)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் பஸீர் சேகுதாவூத்துக்கு எதிராக நிந்தவூர் பிரதேசத்தில் இன்று (10) அவரின் உருவப்படத்தை எரித்து, தங்களின் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை முன்னெடுத்துச்சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஏன் இவரை தவிசாளர் பதவிலிருந்து நீக்குவதற்கு தயங்குகிறது ? ஜனாதிபதிக்கு வாக்களிக்காத தவிசாளர் தேவையா? நல்லாட்சி யுகத்தில் சமூக துரோகி வேண்டாம்..! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மக்கள் ஏந்திய வண்ணமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும் !





Post A Comment:
0 comments: