முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஆளும்கட்சிக்கு பல்டி - மகிந்தவுக்கு ஆதரவு

Share it:
ad
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஆளும் கட்சியின் பக்கம் இணைந்து கொண்டார்.

கண்டியில் இன்று 2-1-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் சகல சிறப்புரிமைகளை அனுபவித்து விட்டு இறுதி நேரத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உவைஸ் ஹாஜியார் கூறியுள்ளார்.

நன்றி மறக்காதவர்களே உண்மையான முஸ்லிம்கள். இதன் அடிப்படையிலேயே தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அப்துல் மற்றும் பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் சுயேட்சை உறுப்பினர் உவைஸ் ரசான் ஆகியோரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Share it:

Post A Comment:

0 comments: