ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் சூறாவளி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை இரவு மத்தியமுகாம், இறக்காமம், அட்டாளைச்சேனை, நிந்தவூர், மருதமுனை ஆகிய இடங்களில் அவர் உரையாற்றுகிறார்.
முன்னதாக, தெஹிஅத்தக்கண்டிய, செவனப்பிட்டி, பொலநறுவை மாவட்டத்தில் தம்பாளை ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு அவா பொது வேடபாளரை ஆதரித்து உரையாற்றினார்.
நாளை அவர் திருகோணமலை மாவட்டத்திலும், மறுநாள் வன்னி மாவட்டத்திலும் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகத் தெரிய வருகின்றது.



Post A Comment:
0 comments: