49 வருடகால அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இரண்டையும் பார்த்துள்ளேன் - மைத்திரிபால

Share it:
ad
பல்கலைக்கழகம் செல்லும் எவரிடமும் கட்டண அறவீடுகளை தாம் மேற்கொள்ளப் போவதில்லை என்று எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இது தொடர்பில் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதையை நிலைமையின் படி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிகணனிக்கு அவர்கள் கல்வியை முடித்த பின்னர் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.

இது தமது ஆட்சியின் போது முழுமையாக அகற்றப்படும்.

தமது 49 வருட கால அரசியல் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டையும் பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன, தற்போது ஏற்பட்டுள்ளதை போன்று, அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ள தேர்தலை தாம் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: