தங்கமீனின் உயிரைக் காப்பாற்ற 30000 ரூபாய் செலவுசெய்த இங்கிலாந்து மனிதர்

Share it:
ad
தான் வளர்க்கும் தங்கமீனின் உயிரைக் காப்பாற்ற 30000 ரூபாய் செலவு செய்த அதிசய மனிதரை இங்கிலாந்து மக்கள் ஆச்சர்யத்தோடு பார்க்கின்றனர். 

இங்கிலாந்தை சேர்ந்த அந்த மனிதர் ஒரு தங்கமீனை வளர்த்து வந்தார். சில நாட்களாக அந்த தங்கமீன் மலச்சிக்கல் காரணமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. 

முதலில் ஏதாவது மருந்து கொடுத்தால் சரியாகிவிடும் என்று நினைத்த அவர் இங்கிலாந்தின் நோர்போக் நகரில் உள்ள ஒரு பிராணிகள் மருத்துவரை அணுகினார். அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் 30000 செலவாகும் என்றதும் பின்வாங்காமல் தனது தங்கமீனுக்கு அறுவை சிகிச்சை செய்ய சொல்லியிருக்கிறார். 

மிகவும் சிறிய மீன் என்பதால் முதலில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்காத அந்த நிறுவனத்தின் முதல்வர் 10 நிமிடங்கள் கழித்து அதன் உரிமையாளரின் அன்பிற்காக சம்மதித்திருக்கிறார். 

29 வயதான பெத்தெல் என்ற பிராணிகள் நல பெண் மருத்துவர் மீனுக்கு கவனமாக மயக்க மருந்து கொடுத்து, சிறிய மருத்துவ உபகரணங்களைக் கொண்டு அறுவை சிகிச்சையைத் தொடங்கினார். 

முதலில் வால் பகுதியில் உள்ள கட்டியையும், பின் முதுகுப்புற துடுப்புப் பகுதியில் இருந்த கட்டியையும் நீக்கி, பின் மீனைத் தண்ணீரில் விட்டு பத்திரமாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். 

இது குறித்து கருத்து தெரிவித்த அந்தப் பெண் மருத்துவர், “மீனுக்கு போதுமான மயக்க மருந்தின் அளவை நிர்ணயிப்பது தான் மிகவும் கடினமாக இருந்தது. அளவு கூடினால் மீன் இறந்து விடும் அபாயம் இருந்தது. 

கெண்டை போன்ற மீன்களுக்கே இது வரை அறுவை சிகிச்சை செய்திருக்கும் நான், தங்கமீனுக்கு அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் தடவை” என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: