-நஜீப் பின் கபூர்-
இந்தத் தேர்தலில் ராஜபக்ஷ தோற்றுப்போனாலும் அவரை அதிகாரத்தில் வைத்திருக்கின்ற பணியை மேற் கொள்வதற்கு இராணுவத்தின் கஜபா பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் எஸ்.பெரேரா, மற்றும் மேஜர் ஜெனரல் பீ. சமரசிங்ஹ என்போர் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபே செயலாற்றி இருக்கின்றார். இந்த இராணுவ நடவடிக்கைக்கு '72 மணி நேர செயல்பாடு' என்று அடையாளப்படுத்தப் பட்டிருந்தது.
இந்த 72 மணி நேர திட்டப்படி 8ம் திகதி நாடு பூராவிலுமுள்ள கேந்திர முக்கிய இடங்களில் நிறுத்துவதற்காக இராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருப்பது. இதில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தொலைக்காட்சி நிலையங்கள். தொலைத் தொடர்பு மையங்கள் என்பவற்றை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது.
தேர்தல் முடிவுகள் ராஜபக்ஷவுக்கு சாதகமாக அமையாத விடத்து தேர்தல் திணைக்களத்துக்குள் புகுந்து பலாத்காரமாக தேர்தல் அறிவிப்புக்களை நிறுத்துதல். அதன் பின்னர் தயார் நிலையில் இருக்கின்ற இராணுவத்தை ஏற்கெனவே இனம் காணப்பட்ட இடங்களில் நிலை கொள்ளச் செய்தல்.
மைத்திரிக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வெளிவருகின்ற போது முடிவுளை அறிவிக்காமல் நிறுத்துவதால் ஏற்படுகின்ற மக்கள் எழுர்ச்சியை அடக்குமுறை கொண்டு கட்டுப்படுத்தல். மேலும் 72 மணி நேரத்திற்கு கொழும்பிலும் புற நகர்களிலும் மக்கள் கூடுவதைத் தடுப்பதற்கு அவசரகால நிலையை அல்லது ஊரடங்கு சட்டத்தைப் பிரகடனப்படுத்தல்.
இப்படி 72 மணித்தியாலங்கள் செல்லும்போது மக்களிடத்தில் தேர்தல் தொடர்பான சுடு தனிந்து இயல்பு நிலை ஏற்படும் என்பது சதிகாரர்கள் கருத்து. அதனைத் தொடர்ந்து இராணுவ உதவியுடன் ராஜபக்ஷ ஆட்சியைத் தொடர்வது. இந்தப் பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு வருடங்கள் தனது பதவியை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுப்பது இவர்களது திட்டாமாக இருந்திருக்கின்றது.
இதற்கு சட்டரீதியான அங்கிகாரத்தை தமக்குச் சாதகமான உயர் நீதி மன்ற நீதியரசரைக் கொண்டு பெற்றுக் கொள்வது இவர்களது அடுத்த திட்டம். இந்த அங்கிகாரத்தை வழங்க பிரதம நீதியரசர் தயாராகவே இருந்தார் என்று அறியப்படுகின்றது.
இந்த சதி வெற்றி பெற்றிருந்தால் அடுத்த வருகின்ற இரண்டு வருடங்களுக்கும் ராஜபக்ஷ இராணுவத்தின் உதவியுடன் தனது ஆட்சியை முன்னெடுத்தச் சென்றிருப்பார். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடவும் அதிக வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.
மைத்திரிக்குச் சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைந்தால் எப்படி இராணுவச் சதியை முன்னெடுப்பது என்பது தொடர்பான முதல் சந்திப்பு ஜனவாரி ஏழாம் திகதி பாதுகாப்பு பிராதனியான ஜகத் பாலசூரியவின் காரியாலயத்தில் நடைபெற்றிருக்கின்றது. இதில் மேஜர் தரத்தில் ஏழு பேரும் பிரிகேடியர் தரத்தில் எட்டுப்பேரும், பொலிஸ் தரப்பில் இரண்டு முக்கியஸ்தர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
பொலிஸ் தரப்பில் உதவிப் பொலிஸ் அதிபர் அனுர சேனாநாயக்கவும் கொழும்பு பிரதேச உதவி பொலிஸ் அதிபர் காமினி மதுரட்ட என்பவரும். பங்கு கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்புக்கான அழைப்பை பாதுகாப்புச் செயலாளர் பெயரில் கொடுத்தவர் மஹிந்த பலசூரிய என்ற முன்னாள் பொலிஸ் அதிபர்.
ஏழாம் திகதிய நடந்த சந்திப்புக்குத் தலைமைத்துவம் கொடுத்தவர் மேஜர் ஜெனரல் எஸ். பெரேரா, மேலும் பீ. சமரசிங்ஹ, பிரிகேடியர் மடவல, பிரிகேடியர் நிவுன்ஹெல்ல, பிஜிரிகேடியர் ஆர்.லமாஹேவா, ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் வெளி வருகின்ற போது இராணுவம் நாட்டைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது தொடர்பாக மேஜர் ஜெனரல் பெரேராவும் ஜயசூரியவும் விளக்கமாகத் தெளிவு படுத்தினார்கள்.
இராணுவம் நாட்டைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்த பின்னர் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பொலிஸார் எப்படி மேற் கொள்வது என்பது தொடர்பாகவும் அங்கு விளக்கமளிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகளான சேனாநாயக்காவும், மதுரட்ட என்பவரும் சதாரண சட்டங்களுக்குப் புறம்பாக எந்த நடவடிக்கைகளிலும் பொலிஸ் ஈடுபடாது என்று அங்கு உறுதியாகக் கூறி விட்டார்கள்.
இதற்கிடையில் பொலிஸ் அதிபர் இலங்கக்கோன் நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சட்டத்திற்குப் புறம்பாக எந்த பொலிசும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையையும் பிறப்பித்திருந்தார்.
இதற்கிடையில் பிரதிப் பொலிஸ் அதிபர் காமினி நவரத்ன நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொலிஸாரை நிறுத்தி நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்திருந்தார். இந்த நடவடிக்கைகளினால் இராணுவத்தின் 72 மணி நேர திட்டத்திற்கு முட்டுக் கட்டை ஏற்பட்டது.
சதி தொடர்பான இரண்டாவது கூட்டம் 8ம் திகதி இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர் காரியாலய கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்பு கலந்து கொண்ட அனைவரும் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த இராணுவ அதிகாரிகள் திட்டமிட்டபடி இராணுவம் குறிப்பிட்ட இடங்களில் அமர்த்தப்பட்டு விட்டதாக அறிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்திலும் இந்த நடவடிக்கைகளுக்குத் எமக்கு ஒத்துழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டையே பொலிஸ் தரப்பில் மீண்டும் உறுதிபடக் கூறப்பட்டது. பொலிஸ் தமது நிலைப்hட்டில் உறுதியாக நின்றது.
இந்த இராணுவ நகர்வுகள் தொடர்பான தகவல்களும் இரண்டு கூட்டங்களிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கும் இன்னும் குறிப்பிட்ட ஒரு சிறு தொகையினருக்கும் தெரிய வந்தது.
ரணில் உடனடியாக இந்த நிலமைகளை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி விட்டார். அதன் விளைவாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெரி உடனடியாக மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்கள் ஆணையை மதித்து சமாதானமாக ஆட்சி மாற்றத்திற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிய வருகின்றது.
இந்த இராணுச் சதியை முன்னெடுப்பதற்கு இராணுவத்pன் 10 படைப்பரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது ஒரு பிரிவில் 800முதல் 1000பேர் வரை அடங்கி இருந்தனர். இந்த வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரும் இராணுத்தில் சில உயர் அதிகாரிகளும் ஒத்துழைக்க மறுத்ததாலும் சர்வதேச அழுத்ங்கள் இதற்கெதிராக செயல்பட ஆரம்பித்ததால் திட்டத்தை முன் னெடுத்தால் பெரும் விளைவுகள் எற்படும் என்று தெரிந்ததால் ராஜபக்ஷக்கள் தமது முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிகின்றது.
எனவேதான் 9ம் திகதி அதி காலை 4.30 மணிக்கு ராஜபக்ஷ ரணிலுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அலரி மாளிகைக்கு வந்து போகுமாறு கேட்டுக் கொள்ளப்;டுகின்றார். ரணில் அங்கு செல்கின்றபோதும் பிரதம நீதியரசர் ராஜபக்ஷவுடன் கூட இருந்தது ரணிலுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் பிரதம நீதி அரசர் ஒரு வேட்;பாளர் வாசஸ்தளத்தில் தங்கி இருப்பது எந்த வகையிலும் பொறுத்தமில்லாத ஒரு நடவடிக்கை. எனவே ராஜபக்ஷ சுமுகமான முறையிலும் நாகரிகமான முறையிலும் மைத்திரிக்கு ஆட்சியைக் கையளித்தார் என்பது உண்மைக்குப் புறம்பான கதையாகத்தான் தெரிகின்றது.
அலரி மாளிகைக்கு வந்த ரணிலிடம் ஒன்றும் நடக்காதது போல்தான் மைத்திரிக்கு ஆட்சிப் பெறுப்பை கையளிக்க இருப்பதாக ராஜபக்ஷ தெரிவித்ததுடன் தனது பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் தொந்தரவுகள் வராதவாறு கவணித்துக் கொள்ள வேண்டும் என்று ரணிலிடம் கேட்டுக் கொண்டதுடன் தனக்கு மெதமூலனைக்குப் போக இரண்டு ஹெலிகப்டர்களை ஏற்பாடு செய்து தருமாறும் ராஜபக்ஷ ரணிலிடம் கேட்டுக் கொண்டார்.
அலரி மாளிகைக்கு ரணில் செல்வதற்கு முன்னர் 9ம்திகதி அதிகாலை 2மணி முதல் 4மணிவரை ஜனாதிபதி மாளிகையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றிருக்கின்றது. இதில் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் தலைவர்கள், ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தெரன தொலைக் காட்சி நிருவன உரிமையாளர் திலிப் ஜயவீர ஆகியோர் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கு கொண்டதாக ராவய ஒரு செய்திக் குறிப்பில் சொல்லி இருக்கின்றது
ராஜபக்ஷ கடைசியாக தனது கடற்படையில் கடமையாற்றுகின்ற மகனை அந்தப் பதவியிலிருந்த விலக்கிக் கொள்ளவதற்காக கடிதத்திலேயே கடைசியாக் கையொபப்மிட்டிருக்கின்றார். இதற்கிடையில் நாமல் ராஜபக்ஷ ஹெல உறுமய செயலாளர் சம்பிக்கவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
தனக்கு தொந்தரவு கொடுத்து நெருகக்டிகளுக் ஆளாக்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன், தன்னால் தந்தையின் ஆட்சிக் காலத்தில் ஏதும் நாட்டுக்கு பொருளாதரார ரீதியில் இழப்புக்ள் ஏற்பட்டிருந்தால் தான் அதற்கான நஸ்டஈட்டைச் செழுத்துவதற்கும் தயாராக இருபப்தாகவும் கூறி இருக்கின்றார். நாமலைத் தெடர்ந்து முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷ சம்பிக்வுடன் பேசி இது விடயமாக கதைத்திருக்கின்றார்.



Post A Comment:
0 comments: