முசலி: நூல் வெளியீட்டு விழா
ஆசிரியர் எம்.எம். மஸ்தான் (தெளபீக்) எழுதிய ‘’வடக்கு முஸ்லீம்களின் பலவந்த வெளியேற்றம்”-1990 எனும் ஆய்வு நூலும் கவிஞர் இஸ்வர்டீன் எழுதிய “அணையாத அனல்கள்” எனும் கவிதை நூலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25 – 01 - 2015) பிற்பகல் 2.30 மணி அளவில், முசலி இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் முனாஸ் அரபாத் காசிம் அவர்களின் தலைமையில் சிலாவத்துறை அ.மு.க. பாடசாலையில் இடம்பெற உள்ளது.
பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சர் கெளரவ அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களும் கெளரவ அதிதிகளாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஹுனைஸ் பாரூக் சட்டத்தரணி, முத்தலிபாவா பாரூக் சட்டத்தரணி அவர்களும் முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய WM எஹியான் விசேட அதிதியாகவும் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் நூலுக்கான ஆய்வுரையை கலாநிதி ஹஸ்புல்லாஹ் அவர்களும் அறிமுக உரையை எஸ்.எம். நியாஸ் அவர்களும் கவிதை நூலுக்கான அறிமுகத்தை ஆசிரியர் ரயீசுத்தீன் அவர்களும், திறனாய்வை சமூக ஜோதி ரபீக் அவர்களும் மேற்கொள்ள உள்ளனர். மேற்படி நிகழ்வுக்கு அனைவரையும் கலந்துகொள்ளும்படி அன்புடன் வரவேற்கின்றோம்.



Post A Comment:
0 comments: