இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC Kuwait) ஏற்பாட்டில் கௌரவிப்பு விழா

Share it:
ad
இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC Kuwait ) , ரவ்தா பிரதேசத்தில் அமைந்திருக்கும் "ஜம்மியத்துல் இஸ்லாஹ் " கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (12) கௌரவிப்பு  விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது .

இதில் குவைத் இலங்கை பிரதி தூதுவர் என்.எம் .எம் அனஸ் , இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் முழு நேர ஊழியர் அஷ்ஷெக் யூ.கே . ரமீஸ் மற்றும் குவைத் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான நான்கு மாணவர்களும்  கௌரவிக்கப் பட்டனர்.

இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ .எம் மன்ஸூர் அவர்கள் இந்நிகழ்ச்சியை  தலைமை தாங்கி சிறப்பாக நடாத்தி வைத்தார்கள் .

இந்நிகழ்ச்சியின்  அதிதிகளாக ஜம்மியத்துல் இஸ்லாஹ் 'ஸகாத்' கமிட்டியின் அத்தியட்சகர் நாஸர் அப்துல் அஸீஸ் அல் ஸைத்   , குவைத் பெரிய பள்ளி வாசல் 'ஜாலியா' பிரிவின் சார்பாக முஹம்மது அலி  உட்பட இலங்கை இந்திய சமூக சேவை அமைப்புக்களும் குவைத் வாழ் இலங்கை இந்தியா முஸ்லிம் சமூகமும் கலந்து சிறப்பித்தது மட்டுமல்லாமல் இவர்களை பாராட்டி  நினைவுச் சின்னங்களை வழங்கியும் கௌரவித்தனர் .

பிரதி தூதுவர் குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கு செய்து வரும் சேவைகள்  , இக்ரஃ இஸ்லாமிய சங்கத்துடனான தொடர்பு மற்றும் அதன் நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிப்பது குறித்து அவருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது . 

அஷ்ஷேக் யூ .கே . றமீஸ் அவர்கள் ஆற்றிய பணிகளின் காணொளித் தொகுப்பொன்று பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது .

மேலும் குவைத்தில் கல்வி பயின்று இந்த வருடம் குவைத் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களான  எம் .எம் . பஸால் , எம்.ஏ .எம்  அஷ்ரப் ,எம் .எப் .எம் ஷஸான் , எம் .எம் .எம் .எம் . பயாஸ் ஆகியோரின் முயற்சிகள்  பாராட்டப்பட்டு  அவர்களது  கல்வி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் கலந்து கொண்டோர் கவிதை,பாட்டு மற்றும் உரைகள் நிகழ்த்தி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இக்ரஃ இஸ்லாமிய சங்கம் சுமார் கடந்த இருபத்தி மூன்று வருடங்களாக குவைத் வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு பல வகையான இஸ்லாமிய பணிகளை செய்து வந்து கொண்டிருக்கிறது .



Share it:

Post A Comment:

0 comments: