''அமைச்சருக்கு அவதூறு'' தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ஐ.தே.க. எம்.பி.

Share it:
ad
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு அவதூறு ஏற்படும் வகையில் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற வாத பிட்டிய என்னும் நிகழ்ச்சியில் கடந்த 3ம் திகதி பங்கேற்றிருந்த அமைச்சர் அலுத்கமகேவின் தனிப்பட்ட வாழ்க்கைத் தொடர்பில் தொலைபேசி நேயர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மாத்தறை சுனில் என தம்மை அடையாளப்படுத்தி அமைச்சரை அசௌகரியகத்திற்கு உள்ளாக்கும் வகையிலான கேள்வியை கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த கேள்வி கேட்கப்பட்ட செல்லிடப்பேசி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பொது மக்கள் முன்னிலையில் தம்மை அவமானப்படுத்த தொலைக்காட்சி நிறுவனம் அனுமதித்ததாகத் தெரிவித்து அமைச்சர் அலுத்கமகே நிகழ்ச்சியின் இடைநடுவில் வெளியேறியிருந்தார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அமைச்சர் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்த குற்ற விசாரணைப் பிரிவினர், ரஞ்சன் ராமநாயக்கவின் பெயரில் பதிவான செல்லிடப்பேசியிலிருந்து கேள்வி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளா் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: