தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிபந்தனைகளுடன் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தது என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என்பது குறித்து ஏற்கனவே ஊகிக்கக் கூடியதாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு என்ன நிபந்தனைகள் எட்டப்பட்டுள்ளன என்பது மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.ம.சு.முவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நற்சான்றிதழ்களை வழங்கும் ஹெல உறுமய 2010ஆம் ஆண்டு ரணில், பொன்சேகா, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவற்றின் கூட்டை புலி, யானை, நரி அசுத்த கூட்டமைப்பு என வர்ணித்த ஜாதிக ஹெல உறுமய, இம்முறை அதேகூட்டணியில் தன்னையும் இணைத்துக்கொண்டிருப்பதாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் தனியானதொரு மாவட்டத்தைக் கோரவில்லை. அரசாங்கம் போலியான பிரசாரத்தை முன்னெடுப்பதாக ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க கூறி வருகின்றார். அசுத்த கூட்டணி எனக் கூறிவந்த ஹெல உறுமய தற்பொழுது நற்சான்றிதழ்களை வழங்கும் மட்டமான நிலைக்குச் சென்றுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து 18வது திருத்தம், உள்ளிட்ட அனைத்துக்கும் கையுயர்த்திவிட்டு தற்பொழுது அரசிலிருந்து வெளியேறி மன்னிப்புக் கோருகின்றனர். செய்வதையெல்லாம் செய்துவிட்டு மன்னிப்புக் கோரினால் எல்லாம் சரியாகிவிடுமா? என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவால் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஐக்கிய’ என்ற ஒரு சொல்லைக் கூட சேர்க்க முடியாது போயிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.
மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு நிறைவேற்றுவதாக உறுதியளித்த நிபந்தனைகளை முடிந்தால் பகிரங்கப்படுத்துமாறும் அவர் சவால் விடுத்தார்.
பாகிஸ்தான் தனிநாடாவதற்கு முன்னர் 1939ஆம் ஆண்டு ரஹமத் அலி செளத்ரி என்பவர் இலங்கையின் கிழக்கு உள்ளிட்ட சில முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக புதியதொரு வலயத்தை உருவாக்குமாறு கோரியிருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியிருக்கும் தனியான மாவட்டம் செளத்ரி முன்னர் கோரிய அதே நிலப்பரப்பைக் கொண்டது. இந்த நிலையில் செளத்திரியின் யோசனையை மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றப்பார்க்கிறாரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


.jpg)
Post A Comment:
0 comments: