கணனி முறைகேடு செய்தேனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வெற்றியீட்டச் செய்யும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என சர்ச்சைக்குரிய பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலின் போது தாம் 120000 விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாகவும் கணனி மோசடி செய்து விருப்பு வாக்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மோசடி செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தற்போதைய தேர்தல் ஆணையாளர் தேர்தல் திணைக்களத்தில் இருந்தார் என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.தேர்தல் ஆணையாளருக்கு மோசடிகள் செய்து நன்றாக அனுபவம் உண்டு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் வீண் வாய்ச்சவாடல் விடுகின்றாரே தவிர உண்மை நிலைமகளை நேரில் வாந்து பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.காவல்துறை உத்தியோகத்தர்கள் குடிபோதையில் இருந்தார்களே தவிர சம்பவத்தை பார்க்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகப்பேச்சாளர்கள் எனத் தெரிவித்துக்கொண்டு பொய் சொல்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் தம்மைக் கைது செய்ய வர மாட்டார்கள் எனவும், தம்மிடம் ஆயுதம் தரித்த பாதுகாவலர்கள் இருக்கின்றார்கள் என்பது காவல்துறையினருக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை திணைக்களத்தைச் சேர்ந்த எட்டு பேர் தம்மைச் சுற்றி இருப்பதாகவும், அவர்கள் தம்மை பாதுகாப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடை மீது தாக்குதல் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் சிரமத்திற்கு மத்தியில் போராடியே மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டதாகவும், தேர்தலில் படுதோல்வியடைந்த திஸ்ஸ அத்தநாயக்க திடீரென சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமக்கு உரிய இடம் கிடைக்காவிட்டால் தாமும் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல அஞ்சப் போவதில்லை, தமக்கு மரியாதை கிடைக்கும் இடத்தில் சேர்ந்துகொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டுவார் எனவும், இதனை அறிந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தல் மேடையை அழித்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Post A Comment:
0 comments: