காத்தான்குடி கூட்டத்தில் காயமடைந்த, பெண்களை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்

Share it:
ad
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து   20-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தாங்கு கம்பி அங்கு வீசிய பலத்த காற்றினால் உடைந்து விழுந்ததில் ஆறு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவத்தில்  தற்போது 4 பெண்கள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் 26 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையயில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த பெண்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 20-12-2014 இன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.


Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

'எமது பிள்ளைகளை, தயாராக்க வேண்டும்' ஜனாதிபதி மைத்திரிபால

தொழில் நுட்பத்துறையில் எமது பிள்ளைகளை உலகளாவிய ரீதியில் போட்டிபோடக் கூடியவர்களாக உருவாக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மை

WadapulaNews