ஆப்கானிஸ்தானில் 13 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த நேட்டோ படையினரின் போர்ப் பணிகள் முடிவுக்கு வந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சி தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தோல்வியடைந்து திரும்புவதாக ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளிலும், கொடும் செயல்களிலும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டன.
தற்போது காபூலில் நடந்து முடிந்துள்ள முடிவு விழா, அந்தப் படையினர் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் திரும்புவதைத் தெளிவாகக் குறிக்கிறது.
அமெரிக்காவும், அதன் ஆக்கிரமிப்புக் கூட்டாளிகளும், இந்தப் போரில் வீழத்தப்பட்டுள்ளனர் என்று தலிபான் அமைப்பு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Post A Comment:
0 comments: