அல்லாஹ்வுக்காக இந்த சமூகத்தை விட்டு விடுங்கள்..!

Share it:
ad
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்.

முஸ்லிம் தனி மாகாண அலகு, தென் கிழக்கு அலகு, என பலதையும் கேட்டு இப்பொழுது கரையோர மாவட்டம் என ஒன்றைக் கேட்கின்றோம்.

உண்மையில் உங்கள் வார்த்தைப் பிரயோகம் முஸ்லிம்கள் குறித்த தப்பிபிராயத்தை பிழையான தரப்புக்கள் சந்தைப் படுத்துவதற்கு போதுமானதாகும்.

முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்கின்ற வகையில் தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணயம் செய்யப்படல், அதே போன்று நிர்வாக கட்டமைப்புக்களான பிரதேச செயலாளர் பிரிவுகள், பிரதேச சபைகள், ஊராட்சி நகராட்சி மன்ற எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படல் என்று வேண்டுகோளை பொதுமைப் படுத்துங்கள்.

அதேவேளை தென்கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களையும் உள்ளடக்கி சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துகின்ற உத்தரவாதங்களை கேளுங்கள்.

நாளை சிங்கள ஊடகங்கள்" முஸ்லிம்களின் தனியாட்சி கோரிக்கை நிராகரிப்பு, முஸ்லிம் காங்கிராஸ் அரசில் இருந்து வெளியேறியது" என செய்தி வெளிவரும் தோழிக் காட்சிகள் அதனை தூக்கிப்பிடிக்கும் அதுவே சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு தீனி போதாவும் போதுமானதாகும்.

அந்த விளம்பரத்துடன் வெளியே வரும் உங்களை பொதுவான எதிர்க் கட்சிக் கூட்டணி நிராகரிக்கும், அவர்களுக்கும் பௌத்த மக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.

ஏற்கனவே இந்த கரையோர மாவட்டத்திற்குள்ளும், ஏனைய வடகிழக்கு பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் அடியாளப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர் தேசிய முன்னணி போன்று பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். இன்றேல்.

ஏற்கனவே மூன்றாவது முறையும் மஹிந்த ராஜபக்ஷ ஜானாதிபதியாவதற்கு வழிவகுத்த18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த நீங்கள் அதே தரப்பில் இருந்து கொள்ளுங்கள்.

வெற்றுக் கோஷங்களை முன்வைத்து சமூகத்தை மென்மேலும் சிரமங்களில் சிக்க வைக்காதீர்கள்..

தீர்வுகளில் ஒரு அங்கமாக இருக்க முடியாவிடின் பிரச்சினைகளில் ஒரு அங்கமாக இருந்து நிலைமைகளை மேலும் மேலும் சிக்கலாக்கி விடாதீர்கள். அல்லாஹ்வுக்காக இந்த சமூகத்தை விட்டு விடுங்கள்...

அதிரடித் தீர்வுகள்:

நடமாடும் செயலகங்களை உடனடியாக அமைத்து முஸ்லிம்களது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

வலக்கரத்தால் கொடுத்து இடக்கரத்தால் பறிக்க முடியுமான தீர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து முகவர்களின் பிரச்சார விளம்பர அனுசரணைகளுக்கு பலிக்கடாவாகது சிவில் தலைமைகள் அவதானமாக இருக்க வேண்டும். (என்றாலும் எமக்கு சேரவேண்டியவற்றை பெற்றுக் கொள்வதில் பின்னிற்க வேண்டியதில்லை.)

நடமாடும் செயலகங்களை உடனடியாக அமைத்து முஸ்லிம்களது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

தலைவர்களுக்காக காத்திராது முஸ்லிம் பிரதேசங்களில் உடனடியாக தீர்க்கமுடியுமான பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களை, ஊடக செயற்பாடுகளை முன்னெடுக்க உரிய தருணமிது.

வட மாகாண முஸ்லிம்களது பூர்வீக இடங்கள் யுத்தம் நிகழ்ந்த காலப்பிரிவில் விடுதலைப்புலிகளால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை மற்றும் இராணுவத்தால் பல்வேறு நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்படுள்ளமையால் இதுவரை முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

பழைய அகதிகள் என்பதனால் வடபுல முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கு நிதி ஒதுக்க வில்லையாம், 20 வருடங்களுக்கு மேல் முஸ்லிம்களது பூர்வீக இடங்களில் அடுத்தவர்கள் குடியிருப்பதால் அவற்றை மீட்டெடுக்க சட்டத்தில் இடமில்லையாம்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஐம்பது ஆயிரம் ஏக்கர் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்கள் தமிழ்ப் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று வரை திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான மேய்ச்சல், விளைச்சல் பாய்ச்சல் காணிகள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அனுமதிப்பத்திர காணிகளுக்கான பத்திரங்கள் புதுப்பிக்கப்படாமல் அகழ்வாராய்வு, திட்டமிட்ட குடியேற்றங்கள்இராணுவ முகாம்கள், அபிவிருத்தி திட்டங்கள்,பாதுக்காப்பு காரணங்கள்,புராதன சின்னங்கள் பாதுக்காப்பு என பல்வேறு நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளன.

புல்மூட்டை, ஓட்டமாவடி என பல பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தமது விவசாய நிலங்களுக்கு முஸ்லிம் மக்கள் செல்வதில் இருந்து இராணுவத்தால் தடுக்கபப்டுகின்றனர்.

நுரைச்சோழையில் முஸ்லிம்களுக்காக அமைக்கப்பட்ட 500 சுனாமி வீடுகள் இதுவரை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை,மாற்று இடங்கள் வழங்கப்படவும் இல்லை.

தீகவாபி அபிவிருத்திக்கென இறக்காமம் வரை முஸ்லிம்களது பூர்வீக இடங்கள் சுவீகரிக்கபபட்டும், அடையாளப்படுத்தப் பட்டும் இருக்கின்றன.

கரையோரப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் வாழ்விடங்களில் சரியான் உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் அடிக்கடி வெள்ளம் வீடுகளுக்குள் பாய்கின்றமையால் வாழ்விடங்களிலும் மக்கள் நிம்மதி இழந்திருக்கின்றனர்.
அங்குள்ள வாழ்விடங்களை பொறுத்தவரை எதிர்கால சந்ததியினருக்கு மாத்திரமன்றி தற்பொழுதுள்ள தலை முறையினருக்கும் வீடு வளவு என காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் வீடமைப்பு திட்டங்கள், புதிய நகராக்கங்கள், காணிப் பங்கீடுகள், குடியேற்றத் திட்டங்கள் என முஸ்லிம்களுக்காக எந்தக் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவதுமில்லை, முஸ்லிம்கள் அவற்றில் உள்வாங்கப்படுவதுமில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க முஸ்லிம் பிரதேசங்களில் புதிய கிராமசேவகர் பிரிவுகள்,பிரதேச சபை பிரிவுகள், பிரதேச சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மீள் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்பட்டு அநீதிகள் இழைக்கப்படுகின்றன.

அரச சேவைகளில், அபிவிருத்தி திட்டங்களில், தொழில், சுய தொழில் வாய்ப்புக்களில் நம் அரசியல் தொழிலாளர்கள் எதனை பெற்றுத் தந்தார்கள்..?
தனி அலகு கேட்ட நாம் அலகுக்குள் இருப்பவற்றையும் இழந்த அழகு !
Share it:

Post A Comment:

0 comments: