கல்முனை துண்டாகிறது..!

Share it:
ad
(எம்.நிசாம்)

கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ள சில பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு புதிய பிரதே சபைகளாக உருவாக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரித்து தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நேற்றிரவு கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு முன்னாள் முதல்வர் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், கல்முனை மாநகர சபையின் கீழ் இருந்த சாய்ந்தமருது மிக விரைவில் தனியான சபையாக பிரியப்போகின்றது. அதேபோன்று ஏனைய பிரதேசங்களும் தனியாக பிரியப்போகின்றது. இதற்குரிய அனைத்து வேலைகளையும் எமது அமைச்சர் மேற்கொண்டுள்ளார். புதிய சபைகளுக்கான வர்த்தமானப் பத்திரிகை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த அரசாங்கம் எமது கட்சியின் கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரித்தது கிடையாது என்றார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரின் பேச்சினை பார்க்கின்றபோது கல்முனை மாநகர சபை பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு சில பிரதேசங்களுக்கு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்படுவதுடன் கல்முனை தமிழ் பிரதேச சபையின் கீழ் கல்முனை பஸார் பகுதியின் ஒரு பகுதியும், முக்கியமான நிறுவனங்களான நீதி மன்றக் கட்டிடத்தொகுதி பிரதேசம், கல்வி அலுவலகம், மின்சார சபையின் காரியாலயம், டெலிகொம் காரியாலயம், போக்குவரத்து சபை காரியாலயம் ஆகியவற்றின் தலைமைக் காரியாலங்கள் மற்றும் இன்னும் பல காரியாலயங்களும் உள்வாங்கப்படவுள்ளது.

இந்த செயற்பாடுகள் கல்முனை நகரம் முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து இல்லாமல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இன்று முஸ்லிம்களின் தலைநகரமாக கல்முனை மாநகரத்தைப் பார்க்கின்றார்கள். அவ்வாறான நிலையில் கல்முனை  மாநகரத்தை பல துண்டுகளாக துண்டாக்கி முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கல்முனைப் பிரதசத்தைச் சேர்ந்த கல்விமான் ஒருவரிடம் வினவியபோது, சாய்ந்தமருதுப் பிரதேசம்  தனியான சபையாகப் பிரிந்து செல்வதினால் பிரச்சினை ஏற்படப்போவதில்லை. ஆனால் கல்முனை பஸார் பிரதேசம் பிரிக்கப்பட்டு தமிழர்களின் சபைக்குள் உள்வாங்கப்படுவதனால்தான் பிரச்சினை வரும்.  முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து கல்முனை நகர் இரவோடு இரவாக இல்லாமல் செய்யப்படவுள்ளது என்றார்.

கல்முனை முஸ்லிம் மக்களுக்கு  ஏற்படவுள்ள இந்த பாரிய அநீதிக்கெதிராக முஸ்லிம் தலைமைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வெண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Share it:

Post A Comment:

0 comments: