இர்ஷாத் (M.A)
திக்கு முக்காடும் தேர்தல் களத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் அறிக்கைகளும், கருத்துகளும் இரு அணியினரையும் ஆதரித்ததாக காணப்படுகின்றது.
இன்னும் அரசின் சுகபோகங்களை அணுபவத்திக்கொண்டிறுப்பவர்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதையும், வளியுறுத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. மார்க ரீதியாக அரசாங்கத்திற்கு வாக்களிப்பது வாஜிப் என்ற தொணியில் அறிக்கைகள் விடுவதும், எதிராக வாக்களிப்பவர்கள் முனாபிக்குகள், முஸ்லிம்களே அல்லர் என்ற கருத்துப்பட அறிக்கைகள் விடுவதும் காணக்கூடயதாக இருக்கின்றது.
மறுபுரத்தில் எதிர் அணியில் இருந்தவர்களும், புதிதாக சாய்ந்தவர்களும் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும், வாக்குச்சீட்டில் வெற்றிலைக்கு கீறுவது தங்கள் கழுத்தில் கீறுவதற்கு சமமானதாகும், முஸ்லிம்களின் உரிமைகளை பறித்தெடுத்த அரசையும், குடும்ப ஆட்சியையும் வீட்டுக்கு அணுப்புவதற்கு மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களை வேண்டிக்கொள்கின்றனர்.
மஹிந்த தலைமையில் உள்ள அரசால் மாத்திரம்தான் முஸ்லிம் மக்களுக்கான வரலாறு காணாத அபிவிருத்திகளையும், பாதுகாப்பினையும் வழங்க முடிந்தது, முடியும். மைத்திரி எமது சமூகத்திற்காக ஒரு கல்லையாவது நாட்டி உள்ளாரா? என்று மக்களை ஏமாற்ற நினைப்பது வேகாததாகும். இத்தேர்தலில் மக்கள் மிகவும் நிதானமாகவே இருக்கின்றார்கள்.
இரு கட்சியின் ஆட்சிக்குற்பட்ட காலத்தில் முஸ்லிம்கள் அல்லலுற்றதும், துன்புறுத்தப்பட்டதும் வரலாற்றுப்பதிவுகளாகும்.
தற்போதய அரசின் காலப்பகுதியில் முஸ்லிம்கள் உரிமை பொருளாதார, சமூக, ரீதியான நெறுக்குவாரத்திற்கு உற்பட்டதை போன்று இதற்கு முன்னர் நெறுக்கப்படவில்லை என்பது உணரப்பட வேண்டியதாகும்.
முஸ்லிம்களின் வணக்கஸ்தளங்கள் உடைப்பு, இராணுவத்தாலும், அரச திணைக்களங்களாலும் காணிகள் அபகரிப்பு, வர்தக நிலையங்களும் , மக்கள் குடியிருப்புகளும் உடைப்பு எரிப்பு, பொருளாதார நெருக்குதல், முஸ்லிம் மக்களின் காணிகளில் சிலை வைப்பு அதிகரிப்பு போன்ற வரலாற்றில் யாராலும் மறக்கப்படமுடியாத செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தகுந்த ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்ட பின்னறும் அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்ததுதான் மக்கள் மனதில் இருக்கும் வேக்காடாகும். அதுவே அரசை வீட்டுக்கு அணுப்ப எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் எழுச்சியின் அஸ்திவாரமுமாகும்.
நடு நிலையாக இருந்து அலசும் போது முஸ்லிம்களின் காவளன் மைத்திரியும் அல்ல மஹிந்தவும் அல்ல. இலங்கையின் அரசியல் களத்தினை வரலாற்று ரீதியாக பார்க்கும் போது இந்த உண்மை உணரப்படும்.



Post A Comment:
0 comments: